Nov 10, 2013

ஜப்பானில் நிலநடுக்கம்: புல்லட் ரெயில்கள் நிறுத்தம்


ஜப்பானில் நிலநடுக்கம்: புல்லட் ரெயில்கள் நிறுத்தம்
பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 10
ஜப்பானில் நிலநடுக்கம்: புல்லட் ரெயில்கள் நிறுத்தம்
ஜப்பானில் இன்று நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் புல்லட் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
ஜப்பானின் கிழக்கு பகுதியில் இன்று காலை நில நடுக்கம ஏற்பட்டது. இதனால் தலைநகர் டோக்கியோ உள்பட அதை சுற்றியுள்ள பகுதிகள் அதிர்ந்தன.
இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி ஓட்டம் பிடித்தனர்.
டோக்கியோவில் இருந்து ஜப்பானின் வடக்கு பகுதிக்கு புல்லட் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. நில நடுக்கம காரணமாக அந்த ரெயில்களின் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
அதே நேரத்தில் 2 சர்வதேச விமான நிலையங்கள் வழக்கம்போல் இயங்கின
. விமான போக்குவரத்து நடந்தது. நில நடுக்கம ஏற்பட்ட பகுதியில் தான் ஏற்கெனவே பூகம்பத்தில் பாதித்த புரூஷிமா அணுஉலை உள்ளது.
அது இன்று ஏற்பட்ட நில நடுக்கத்தல் எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவல்லை.
இதற்கிடையே 5.5. ரிக்டரில் நில நடுக்கம் பதிவானதாக அறிவிக்கப்பட்டது. டோக்கியோவின் வடமேற்கில் உள்ள இப்ராகி மாகாணத்தை மையமாக கொண்டு நல நடுக்கம எற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஏற்பட்ட உயிர் சேதம் மற்றும் பொருட்சேத விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...