Nov 19, 2013

மருத்துவக் குணம் நிறைந்த அகத்திக்கீரை



அகத்திக் கீரையில் புரதச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, தாது உப்புக்கள், நார்ச்சத்து போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. வைட்டமின் ஏ, வைட்டமின் சி, நிக்கோடினிக் அமிலம் போன்றவை அடங்கியுள்ளன. இக்கீரை உடலில் உள்ள நஞ்சை முறிக்கும் குணமுள்ளதால் மருந்து உட்கொள்ளும் தருணங்களில் இதைத் தவிர்க்குமாறு வைத்தியர்கள் அறிவுறுத்துகின்றனர்.

இதனுடைய தண்டு, பூ, இலை அனைத்திலுமே மருத்துவ குணம் நிறைந்துள்ளது. பூவை சமைத்து சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும். இக்கீரை உடலில் உள்ள உஷ்ணத்தை தவிர்ப்பதோடு, பெண்களுக்கு தாய்ப்பால் அதிகம் சுரக்க வைக்கும் தன்மையும் இதில் உள்ளது. வாய்வு தொல்லையிலிருந்து விடுபடவும் இக்கீரை உதவுகிறது. தொண்டையில் தோன்றும் புண், எரிச்சலுக்கு தினமும் அகத்தீக் கீரையை வெறும் வாயில் மென்று தின்றாலே போதும் உடனடி நீவாரணம் கிடைக்கும்.

அகத்திய இலைகளை பிழிந்து சாறு எடுத்து தேன் கலந்து சாப்பிட்டு வர வயிற்று வலி தீரும். இக்கீரை மூளையை பலப்படுத்தி அறிவு திறமையை கூர்மையாக்கும் சக்தி உள்ளது. தினமும் நம் உணவில் சேர்த்துக் கொள்வதினால் உடல் சூட்டில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம். அகத்திக்கீரை சாறு எடுத்து குடிப்பதால் தும்மல், ஜலதோஷம் குணமாகும். தினமும் இக்கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதால் இயற்கையாகவே நம் உடலுக்கு பல நன்மைகள் வந்து சேரும்

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...