Nov 2, 2013

சில பழங்களின் தூய தமிழ் சொல் !...


as
தமிழில் தவறாக பயன்படுத்தப்படும் சில பழங்களின் தூய தமிழ் சொற்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளது. வேறு பழங்களின் தூய தமிழ் பெயர்கள் தெரிந்தவர்களும், இங்கு தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்ட நினைப்பவர்களும் கருத்தில் கூறவும்....
APPLE – அரத்திப்பழம், குமளிப்பழம் 
APRICOT – சர்க்கரை பாதாமி 
AVOCADO – வெண்ணைப் பழம் 
BANANA – வாழைப்பழம் 
BELL FRUIT – பஞ்சலிப்பழம் 
BILBERRY – அவுரிநெல்லி 
BLACK CURRANT – கருந்திராட்சை, கருங்கொடிமுந்திரி 
BLACKBERRY – நாகப்பழம் 
BLUEBERRY – அவுரிநெல்லி 
BITTER WATERMELON – கெச்சி 
BREADFRUIT – சீமைப்பலா, ஈரப்பலா 
CANTALOUPE – மஞ்சள் முலாம்பழம் 
CARACALLA – விளிம்பிப்பழம் 

CASHEW-FRUIT – முந்திரிப்பழம் 
CHERRY – சேலா(ப்பழம்) 
CHICK – சீமையிலுப்பை 
CITRON – கடாரநாரத்தை 
CITRUS AURANTIFOLIA – நாரத்தை
CITRUS AURANTIUM – கிச்சிலிப்பழம் 
CITRUS MEDICA – கடரநாரத்தை 
CITRUS RETICULATA – கமலாப்பழம் 
CITRUS SINENSIS – சாத்துக்கொடி 
CRANBERRY – குருதிநெல்லி 
CUCUMUS TRIGONUS – கெச்சி 
CUSTARD APPLE – சீத்தாப்பழம் 
DEVIL FIG – பேயத்தி 
DURIAN – முள்நாரிப்பழம் 
EUGENIA RUBICUNDA – சிறுநாவல் 
GOOSEBERRY – நெல்லிக்காய் 
GRAPE – கொடிமுந்திரி, திராட்சைப்பழம் 
GRAPEFRUIT – பம்பரமாசு 
GUAVA – கொய்யாப்பழம் 
HANEPOOT – அரபுக் கொடிமுந்திரி 
HARFAROWRIE – அரைநெல்லி 
JACK FRUIT – பலாப்பழம் 
JAMB FRUIT – நாவல்பழம் 
KIWI – பசலிப்பழம் 
LYCHEE – விளச்சிப்பழம் 
MANGO FRUIT – மாம்பழம் 
MANGOSTEEN – கடார முருகல் 
MELON – வெள்ளரிப்பழம் 
MULBERRY – முசுக்கட்டைப்பழம் 
MUSCAT GRAPE – அரபுக் கொடிமுந்திரி 
ORANGE – தோடைப்பழம், நரந்தம்பழம் 
ORANGE (SWEET) – சாத்துக்கொடி 
ORANGE (LOOSE JACKET) – கமலாப்பழம் 
PAIR – பேரிக்காய் PAPAYA – பப்பாளி 
PASSIONFRUIT – கொடித்தோடைப்பழம் 
PEACH – குழிப்பேரி 
PERSIMMON – சீமைப் பனிச்சை 
PHYLLANTHUS DISTICHUS – அரைநெல்லி 
PLUM – ஆல்பக்கோடா 
POMELO – பம்பரமாசு 
PRUNE – உலர்த்தியப் பழம்
QUINCE – சீமைமாதுளை, சீமைமாதுளம்பழம் 
RAISIN – உலர் கொடிமுந்திரி, உலர் திராட்சை 
RASPBERRY – புற்றுப்பழம் 
RED BANANA – செவ்வாழைப்பழம் 
RED CURRANT – செந்திராட்சை, செங்கொடிமுந்திரி 
SAPODILLA – சீமையிலுப்பை 
STAR-FRUIT – விளிம்பிப்பழம் 
STRAWBERRY – செம்புற்றுப்பழம் 
SWEET SOP – சீத்தாப்பழம் 
TAMARILLO – குறுந்தக்காளி 
TANGERINE – தேனரந்தம்பழம் 
UGLI FRUIT – முரட்டுத் தோடை 
WATERMELON – குமட்டிப்பழம், தர்பூசணி 
WOOD APPLE – விளாம்பழம்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...