Dec 2, 2013

5 லட்சத்து 36 ஆயிரம் கி.மீட்டர் பயணித்து வெற்றிகரமாக சந்திரனை கடந்து செவ்வாய் நோக்கி விரையும் மங்கல்யான்



5 லட்சத்து 36 ஆயிரம் கி.மீட்டர் பயணித்து வெற்றிகரமாக சந்திரனை கடந்து செவ்வாய் நோக்கி விரையும் மங்கல்யான்
புதுடெல்லி, டிச.3-

செவ்வாய் கிரகம் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக இந்தியா மங்கல்யான் விண்கலத்தை அனுப்பி உள்ளது. 450 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்த விண்கலம் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து கடந்த மாதம் 5-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.

பூமியைச் சுற்றி வரும் மங்கல்யானின் சுற்று வட்டப்பாதை படிப்படியாக உயர்த்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2 லட்சம் கி.மீ. உயரத்துக்கு பல்வேறு சிக்கல்களுக்குப்பின் உயர்த்தப்பட்டது. சுற்று வட்டப்பாதையை

உயர்த்தும்போது மங்கல்யானில் உள்ள சிறிய ராக்கெட்டுகள் இயங்கவில்லை என்றாலும் அதில் உள்ள எரிபொருள்கள் வீணாகாததால் ராக்கெட்டுகளை மீண்டும் இயக்கும் பணி நடந்தது. இதில் இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றி பெற்றனர்.

பூமியின் சுற்று வட்டப்பாதையில் 2 லட்சம் கி.மீ. தூரத்தை விண்கலம் எட்டி விட்டதால் அடுத்தகட்டமாக மங்கல்யானை செவ்வாய் கிரகம் நோக்கி திசை திருப்பும் பணியும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

செவ்வாய் கிரகத்துக்கு திசை திருப்பும் பணி மிகவும் சிக்கலானது என்பதால் மங்கல்யானுக்கு இது முக்கிய கட்டமாகும். செவ்வாய் நோக்கி பயணத்தை திசை திருப்பும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் இறங்கினர்.

மிகவும் சிக்கலான செவ்வாய் கிரகத்துக்கு திசை திருப்பும் பணி  மங்கல்யானின் பயணத்தில் மிக முக்கியமான படிநிலையாக கருதப்பட்டது. இந்த பணியும் இந்திய நேரப்படி, கடந்த 1-ம் நள்ளிரவு 12.49-க்கு துவங்கி வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், நேற்று மாலை 5 மணி நிலவரப்படி 5 லட்சத்து 36 ஆயிரம் கிலோ மீட்டர் தூர பயணத்தை நிறைவு செய்த மங்கல்யான் சந்திரனின் சுற்றுப்பாதையை வெற்றிகரமாக கடந்து சென்றதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

சூரியனை சுற்றி சுமார் 680 மில்லியன் கிலோமீட்டர் பயணத்தை 300 நாட்களில் பூர்த்தி செய்யவுள்ள மங்கல்யான், அடுத்த(2014) ஆண்டு செப்டம்பர் மாதம் செவ்வாய் கிரகத்தை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...