Dec 2, 2013

இதயத்துடிப்பை அதிகரிக்கும் காபின் சக்தி பானங்கள்

இதயத்துடிப்பை அதிகரிக்கும் காபின் சக்தி பானங்கள்


சமீபத்தில் வடஅமெரிக்காவில் கதிரியல் (ரேடியாலஜிகல்) சங்கத்தின் வருடாந்திரக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட ஜெர்மனியின் பான் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் குழு காபின் கலந்த சக்தி பானங்களைக் குடிப்பதால் இதயத்துடிப்பு அதிகரிப்பதை தங்களின் ஆய்வு நிரூபித்திருப்பதாகத் தெரிவித்தனர்.

இத்தகைய சக்தி பானங்களைக் குடித்த 17 பேரின் இதயங்களின் செயல்பாடுகள் ஒரு மணி நேரம் கழித்து குறிக்கப்பட்டன. அதில் அவர்களின் இதயத்துடிப்பு அதிகரித்திருப்பது தெரியவந்தது என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

இதுநாள்வரை இந்த சக்தி பானங்கள் இதயத்தின் செயல்பாடுகளில் ஏற்படுத்திய விளைவுகள் குறித்து தெளிவாகத் தெரியவில்லை. சாதாரணமாகப் பருகும் காபி அல்லது கோலா போன்ற பானங்களைவிட இவற்றில் மூன்று மடங்கு காபின் அதிகமாகக் காணப்படுகின்றது. 

விரைவான இதயத்துடிப்பு, படபடப்பு, இரத்த அழுத்தம் அதிகரிப்பு, மிகக் கடுமையான சந்தர்ப்பங்களில் வலிப்பு மற்றும் திடீர் மரணம் போன்றவை இதன் பக்க விளைவுகளாக கூறப்படுகின்றன. எனவே, குழந்தைகளும், சில சுகாதார பாதிப்புகளைக் கொண்டவர்களும் இத்தகைய சக்தி பானங்களைத் தவிர்க்கவேண்டும் என்று ஆராய்ச்சியாளரான டாக்டர் ஜோனஸ் டோர்னர் தெரிவித்தார்.

பிரிட்டிஷ் குளிர்பான சங்கங்கள் ஏற்கனவே இந்த பானங்கள் குழந்தைகளுக்கானவை இல்லை என்பதைத் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...