Feb 3, 2013

இளமைக் காலத்தை மகிழ்ச்சியாக கழிக்காதவர்களை இதய நோய் தாக்கும்!

இளமைக் காலத்தை மகிழ்ச்சியாக கழிக்காதவர்களை இதய நோய் தாக்கும்!


February 3, 2013  10:40 am
இளமைக் காலத்தை மகிழ்ச்சிகரமானதாக கழிக்காத பொரும்பாலானோர் பிற்காலத்தில் இதய நோய்களுக்கு உட்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளது.

அமெரிக்கா ஆய்வாளர்கள் இந்த தகவல்களினை வெளியிட்டுள்ளனர். இத்தகைய இதய நோய்த்தாக்கம் பெண்களுக்கே அதிகம் ஏற்படுவதாகவும் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

337 பேரை கொண்டு அமெரிக்க ஆய்வாளர்கள் மேற்கொண்ட பரிசோதனையின் மூலம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

ஏழு வயதில் உளவியல் ரீதியாக பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்த பெண்கள் இதய நோய்த் தாக்கத்திற்கு உட்படுதல் நூற்றுக்கு 31 வீதமாக அதிகரித்துள்ளது.

இவ்வாறான ஆண்கள் இதய நோய்த்தாக்கத்திற்கு உட்படுதல் நூற்றுக்கு 17 வீதமாகவும் உள்ளது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...