Feb 3, 2013

உள்ளங்கை அளவே உள்ள இங்கிலாந்தின் நவீன உளவு விமானம்



உள்ளங்கை அளவே உள்ள இங்கிலாந்தின் நவீன உளவு விமானம்
லண்டன், பிப். 4- 

ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் தலிபான்களுக்கு எதிரான போரில், உள்ளங்கைக்குள் அடங்கிவிடும் உளவு விமானத்தை ஈடுபடுத்த இங்கிலாந்து திட்டமிட்டுள்ளது. 8 அங்குல நீளம் கொண்ட இந்த உளவு விமானத்தின் எடை வெறும் 15 கிராம் தான். 

விமானத்தின் மூக்கு பகுதியில் உள்ள சக்திவாய்ந்த 3 கேமராக்கள், எதிரியின் இலக்கை வெகு துல்லியமாக படம் பிடித்து கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி வைக்கும். ஜி.பி.எஸ். கருவி மற்றும் 'ஜாய் ஸ்டிக்' உதவியுடன் இயங்கும் இந்த உளவு விமானத்துக்கு 'பிளாக் ஹார்னட்' என பெயரிடப்பட்டுள்ளது. 

இந்த விமானம் எதிரி இலக்கின் மீது பறக்கும் போது யாராலும் கண்டுபிடிக்க முடியாது. ஓசையை கூட கேட்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...