Feb 3, 2013

நிலவில் வீடுகட்டும் முயற்சி : முப்பரிமாணப் படங்கள் வெளியீடு!



நிலவின் தரையில் காணப்படும் மூலப் பொருட்களைக் கொண்டே அங்கு எதிர்காலத்தில் கட்டுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள கட்டடங்களின் முப்பரிமாண வடிவமைப்பு படங்களைப் பொறியியல் ஊக்குவிப்பாளர்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.
அதாவது முதலில் பூமியில் இருந்து இக்கட்டடங்களின் கட்டமைப்பு நிலவுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து 3D பிரிண்டர்கள் மூலம் பெறப்பட்ட ஷெல் (Shell) மூலம் வடிவமைக்கப் படவுள்ளது.

இந்த 3D பிரிண்டர்கள் நிலவில் ரோபோட்டுக்கள் மூலம் இயக்கப் படவுள்ளதுடன், இவை ரெகொலித் (regolith) என அழைக்கப்படும் நிலவில் உள்ள மண்ணைப் பயன்படுத்தி கட்டமைப்பைச் சுற்றியுள்ள cover ஐயும் ஆக்கவுள்ளன. இக்கட்டடம் அமைப்பதற்கு நிலவின் தென் முனையில் உள்ள துருவப் பகுதி மும்மொழியப் பட்டுள்ளது. மேலும் வருங்காலத்தில் நிலவில் தங்கி விண்வெளி ஆராய்ச்சி செய்யக் கூடிய குறைந்தது 4 விண்வெளி வீரர்களுக்கான வீடாக இக்கட்டடங்கள் ஆரம்பத்தில் பயன்படுவதுடன் இது மேலும் விரிவு படுத்தப் படலாம் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டு வாஷிங்டன் ஸ்டேட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நிலவில் உள்ள செயற்கை regolith மண் சிலிக்கன், அலுமினியம், கல்சியம், இரும்பு மற்றும் மக்னீசியம் ஒக்ஸைட்டு ஆகிய மூலகங்களைக் கொண்டிருப்பதுடன் இவை 3D பிரிண்டர்கள் மூலம் உபயோகப் படுத்தப் பட்டு திண்ம நிலையிலான கட்டமைப்புக்களை உருவாக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளனர். இச் செயற்திட்டத்தில் ஐரோப்பிய விண்வெளி ஆய்வுக் கழகமான ESA உம் பங்களிப்புச் செய்யவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

வருங்காலத்தில் விண்வெளி ஆராய்ச்சியில் 3D பிரிண்டர்களின் தொழிநுட்ப உதவியுடன் சந்திரன் மற்றும் வேற்றுக்கிரகங்களில் கட்டட நிர்மாணங்கள் மேற்கொள்ளப் படவுள்ளது என்பதுடன் இது மிகவும் பிரயோசனம் மிக்க வளர்ந்து வரும் துறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...