Jul 30, 2013

வதிவிட உரிமை அட்டை - புதிய நடைமுறை


Seine-Saint-Denis (93) பிராந்தியத்தில் வசிப்பவர்களுக்கு பொபினி  Préfecture புதிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. இதன் மூலம் அதிகாலையிலேயே வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் தவிர்க்கப்பட்டுள்ளது.
 
* உங்களுக்குரிய 1 வருட வதிவிட உரிமை அட்டையைப் புதுப்பிக்க (Titre de Sejour 1 an)
* உங்களுக்குரிய 10 வருட வதிவிட உரிமை அட்டையைப் புதுப்பிக்க (Titre de Sejour 10 ans)
* 5 வருடங்கள் 1 வருட வதிவிட உரிமை பெற்று அதனை 10 வருட வதிவிட உரிமை அட்டையாக மாற்ற  (Passage en 10 ans)
* உங்கள் வதிவிடத் தகுதி நிலையை மாற்ற (Changement de statut)
* வேறு பிராந்யத்திலிருந்து 93ற்கு விலாசம் மாற்ற (Changement d'adresse - aute département)
* உங்கள் பெயர் மாற்ற (Modification du nom)
* தொலைந்த வதிவிட உரிமை அட்டைக்கு மாற்றீடு அட்டை பெற (Duplicata)
 
நீங்கள் Préfecture நாடிச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. முதலில் www.seine-saint-denis.gouv.fr எனும் இணையத்தள முகவரியில் உங்களுக்குரிய பகுதியில் பதிவு செய்து  அதற்கான விண்ணப்பத்தை இணையத்தளத்திலேயே நிரப்பி அனுப்பினால் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் சந்திப்பிற்காகன நேரமும் (RDV) கொண்டு வரவேண்டிய ஆவணங்களின் விபரமும் அனுப்பி வைக்கப்படும்.
 
http://www.seine-saint-denis.gouv.fr/Demarches-administratives/Etrangers/Sejour/Ressortissants-d-un-pays-hors-Union-europeenne/Renouvellement-d-un-titre-de-sejour எனும் பகுதியில் உங்கள் வதிவிட உரிமை அட்டையைப் புதுப்பித்துக் கொள்ள முடியும்.
 
ஏனைய விடயங்களைப் பின்வரும் இணையத்தள முகவரியில் செய்து கொள்ள முடியும்
 
 
உங்கள் வதிவிட அட்டை முடிவதற்கு மூன்று மாதங்களிற்கு முதல் அனுப்பபடும் விண்ணப்பங்கள் மாத்திரமே ஏற்றுக் கொள்ளப்படும்.  
இதன் மூலம் உங்கள் நேரம் மிச்சப்படுத்தப்படுவதோடு உங்களுக்கான சந்திப்பு நேரமும்; வழங்கப்படுவதால் உங்கள் காத்திருப்பு நேரமும் மிச்சப்படுத்தப்டுகின்றது உங்கள் புதிய வதிவிட உரிமை அட்டை தயாரானவுடன் உங்களுக்கு அது குறுஞ் செய்தி மூலமும் அனுப்பி வைக்கப்படும் என  Préfecture de Bobigny தெரிவித்துள்ளது.
 
 
 

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...