Jul 30, 2013

பிரான்ஸைச் சுற்றிப்பார்ப்போம் வாருங்கள் - பகுதி1 (காணொளி)

பிரான்ஸ் தேசம் தனது வரலாற்றுச் சிறப்பு மிக்க நினைவுச் சின்னங்களாலும் அரண்மணைகளாலும் தன் வீரத்தினையும் சிறப்பு மிக்க வாழ்வையும் இன்றும் சான்றாகக் கொண்டு மிளிர்ந்து நிற்கும் ஒரு தேசமாகும். அழகு மிக்க இந்த நாடு தன் பண்டைய மற்றும் நவீனக் கட்டக் கலையாலும் இயற்கை அழகுகளாலும் உலக மக்கள் மனங்களை எல்லாம் கொள்ளை கொண்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் காதல் தேசமாகப் பிரான்சும் அதன் கலாச்சாரமும் அனைவரையும் தன் பால் ஈர்த்துள்ளது. பரிஸ்ம் அதனை அண்மித்த புறநகர்ப் பிரதேசங்களும் பெருமளவான சுற்றுலாப் பயணிகளைத் தம் பால் வசீகரிக்கும் அழகும் வரலாறும் உடையவை.
 
 
 
அவற்றின்முக்கியமான பகுதிகள் சிலவற்றை உங்கள்கோடை விடுமுறைக்குக் கண்டுகளிக்க இலகுவாக நாம் இங்கே தருகின்றோம்.
 
இந்தச் சுற்றுலாவின் முதற்கட்டமாக விபரமாக நாம் பின்வபவற்றைச் சில நாட்களிற்குப் பார்ப்போம்.
 
1. ஈபிள் கோபுரம்.
2. லூவ்ர் அருங்காட்சியகமும் அதன் தோட்டங்களும் பிரமிட்டும்
3. Notre dame de Paris Njthyak; (Our Lady of Paris)
4. ஒப்பேராவும் அதன் சுற்றுப்புறமும்
5. இருதய நாதர் தேவாலயம் (White Church - sacre coeur de montmartre)
6. வேர்செய்ல் அரண்மணையும் தோட்டமும்
7. பொம்பிதூ சதுக்கம்
8. Tuilerie தோட்டம்
09. Arc De Triomphe (etoile)
10. pantheon
11. டிஸ்னி லாண்ட்
 

;
 
 
1. ஈபிள் கோபுரம்.
 
 
 
ஈபிள் கோபுரமானது 324 மீற்றர் உயரத்துடன் நான்கு கால்களையுடைய கோபுரமாகும். இது பரிசின் ஏராவது பிரிவில் அமைந்துள்ளது. இது குஸ்தாவ் ஈபிள் அவர்களால் 1889ம் ஆண்டு பிரான்சில் நடைபெற்ற உலகக் காண்காட்சிக்காக உருவாக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகள் இரண்டு மாதங்கள் 5 நாட்களில் இந்த அதிசயக் கோபுரம் கட்டப்பட்டது. இது 18,000 இரும்புத்துண்டுகளை 2,500,000 (205 மில்லியன்) தறை ஆணிகளால் இணைத்துக் கட்டப்பட்டுள்ளது. இதன் உச்சி வரை 1,665 படிகள் உள்ளன.  
 
 
ஆரம்பத்தில் இதற்கு 300 மீற்றர் கோபுரம் என்றே பெயரிடப்பட்டது. பிரெஞ்சுப் புரட்சி நடந்து பிரான்ஸ் மக்கள் குடியரசாகி நூறு வருடங்களின் பின்னர் கட்டப்பட்ட ஈபிள் கோபுரம் பரிசின் சின்னமாகவும் சுற்றுலாப்பயணிகளின் தவிர்க்கமுடியாத இடமாகவும் மாற்றம் பெற்றது. இது கட்டப்பட்டு 41 வருடங்களுக்கு இதுவே உலகின் மிக உயர்ந்த கோபுரமாகத் திகழ்ந்தது. 279,11 மீற்றர் உயரம் கொண்ட இதன் இரண்டாவது மாடி பொது மக்கள் அனுமதிக்கப்படும் மிக உயர்ந்த இடமாக உள்ளது. ரஸ்யாவின் மொஸ்கோவிலுள்ள ஒஸ்டாங்கினோ கோபுரம் 337 மீற்றர் உயரத்தில் இருந்தாலும் அங்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படுவதில்லை. 
 
2000ம் ஆண்டிலிருந்து ஈபிள் கோபுரம் மிண்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. இரவு நேரங்களில் ஈபிள் கோபுரத்திலிருந்து பரவும் ஒளி கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
 
 
ஈபிள் கோபுரத்தின் இரண்டாவது மாடியும் மூன்றாவது மாடியும் மக்கள் ஏறிப்பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் படிகளின் மூலமாகவோ அல்லது மின்தூக்கி மூலமாகவோ (LIFT) ஏற முடியும். படி மூலமாக ஏறுவோர் இரண்டாம் மாடிக்கு மட்டுமே அனுமதிக்கப்டுவார்கள். இக் கோபுரத்தின் உச்சியில் இருந்து முழுமையான பரிசையும் அதன் சுற்றுப் பகுதிகளையும் 360 பாகையில் சுற்றிப் பார்க்க முடியும். இதன் மின்தூக்கிகள் ஒரு வருடத்திற்கு மேலும் கீழுமாகப் பயணம் செய்யும் தூரம் கிட்டத்தட்ட ஒரு இலட்சத்து மூவாயிரம் கிலோமீற்றர்கள் (103,000). இது உலகத்தின் சுற்றளவின் இரண்டரை மடங்காகும்.
 
ஈபிள் கோபுரத்தில் ஏறுவதற்குக் கட்டணமாக
 
மின்தூக்கி மூலம் இரண்டாம் மாடி வரை செல்ல
4 இலிருந்து 11 வயது வரை 4 யூரோக்களும் 
12 இலிருந்து 24 வயது வரை 7 யூரோக்களும் 
24 வயதிற்கு மேல் 8.50 யூரோக்களும் அறவிடப்படுகின்றது
 
மின்தூக்கி மூலம் மூன்றாம் மாடி (உச்சி) வரை செல்ல
4 இலிருந்து 11 வயது வரை 10 யூரோக்களும் 
12 இலிருந்து 24 வயது வரை 13 யூரோக்களும் 
24 வயதிற்கு மேல் 14.50 யூரோக்களும் அறவிடப்படுகின்றது
 
மாடிப்படி மூலம் இரண்டாம் மாடி வரை செல்ல
4 இலிருந்து 11 வயது வரை 3 யூரோக்களும் 
12 இலிருந்து 24 வயது வரை 3.50 யூரோக்களும் 
24 வயதிற்கு மேல் 5 யூரோக்களும் அறவிடப்படுகின்றது
 
4 வயதிற்குக் கீழ்ப்பட்டவர்களுக்கு இலவசம். 
 
20 பேர்களுக்கு மேற்பட்ட குழக்களுக்கு சிறப்புக் கட்ணங்கள் உள்ளன. 
 
திறந்திருக்கும் நேரம் 
ஜுன் 15 முதல் செப்டெம்பர் 1 வரை காலை 9 மணியிலிருந்து நள்ளிரவு 00:45 வரை
மூன்றாம் மாடிக்கான இறுதி மின்தூக்கி மாலை 23:00 மணிக்கு.
படி மூலமாக இறுதி அனுமதி நள்ளிரவு வரை.
ஏனைய நாட்களில் காலை 9:30 இலிருந்து மாலை 23:45 வரை
மூன்றாம் மாடிக்கான இறுதி மின்தூக்கி மாலை 22:30 மணிக்கு.
படி மூலமாக இறுதி அனுமதி 18:00 மணிக்கு (படி அனுமதி 18h30 வரை மட்டுமே)
 
மெட்ரோ 6 இல் Bir-Hakeim தரிப்பிட நிலையம் (இது வெளியில் பயணிப்பதால் மெட்ரோவிலிருந்தே ஈபிள்கோபுரம் அண்மிப்பதைப் பார்த்து மகிழ முடியும்)
அல்லது மெட்ரோ 9 இல் Trocadéro தரிப்பிட நிலையம் 
RER C யில் Champs de Mars - Tour Eiffel தரிப்பிட நிலையத்திலும் இறங்கி ஈபிள் கோபுரத்திற்குச் செல்ல முடியும். 
 
வாகனத்தில் சென்றால் அப்பகுதியில் தரிப்பிட வசதி மிகக் குறைவாகவே இருக்கும். நிலக்கீழ்த் தரிப்பிடங்கள் மிக உயர்ந்த கட்டணங்கள் உடையவை. பொதுப் போக்குவரத்து இலகுவானது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...