Feb 24, 2014

ஆஸ்திரேலியா: ஒரு லட்சம் டாலர் மதிப்புள்ள ராட்சத மாம்பழம் திருட்டு



mangoங்காரு நாடு என்று அழைக்கப்படும் ஆஸ்திரேலியாவின் மக்கள் பிரபல சுற்றுலா தலங்களில் பிரமாண்ட சிற்பங்களையும், நினைவுச் சின்னங்களையும் நிறுவி பார்வையாளர்களை கவரும் கலையில் கை தேர்ந்தவர்கள்.
ராட்சத வாழைப்பழம், ராட்சத இறால் போன்ற கலைநயம் மிக்க பல சிற்பங்களை நாடு முழுவதும் நிறுவியுள்ள ஆஸ்திரேலிய நாட்டின் சுற்றுலா துறை, கடந்த 2002-ம் ஆண்டு குவீன்ஸ்லாந்து பகுதியில் 10 டன் எடையில் 30 அடி உயரம் கொண்ட ராட்சத மாம்பழத்தை கண்ணாடி இழை உலோகத்தில் உருவாக்கி வைத்திருந்தது.
சுமார் ஒரு லட்சம் ஆஸ்திரேலிய டாலர்கள் செலவில் 3 மாடி கட்டிடத்துக்கு இணையாக கம்பீரமாக நிமிர்ந்து நின்ற அந்த மாம்பழம் இரவோடு இரவாக காணாமல் போனதை அறிந்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்துப் போயினர். இது பற்றிய தகவல் அறிந்த சுற்றுலா துறை அதிகாரிகள் விரைந்தோடி வந்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தபோது அவர்கள் கண்ட காட்சி திடுக்கிட வைத்தது.
நள்ளிரவு 2 மணியளவில் ராட்சத கிரேனுடன் அப்பகுதிக்கு வந்த சிலர் அந்த மாங்காய் சிற்பத்தை பீடத்துடன் பெயர்த்து எடுத்து சென்ற காட்சி கேமராவில் பதிவாகியிருந்தது. ’இவ்வளவு பெரிய ராட்சத மாம்பழத்தை திருடி சென்றவர்கள் அதை அவ்வளவு சுலபமாக மறைத்து வைக்க முடியாது. விரைவில் அந்த சமூக விரோதிகள் பிடிபட்டு விடுவார்கள். மாம்பழத்தையும் மீட்டு பழைய இடத்திலேயே நிறுத்தி வைப்போம்’ என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...