Feb 26, 2014

இஸ்ரோவுடன் இணைந்து ஏவுகணை செலுத்தும் நாசா


இஸ்ரோவுடன் இணைந்து ஏவுகணை செலுத்தும் நாசா

நியூயார்க், பிப். 26–
பூமியின் நிலம், காற்று, விண்வெளி போன்றவை குறித்து ‘நாசா’ மையம் பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. அதற்காக செயற்கை கோள்களை பறக்க விட்டு பல்வேறு ஆராய்ச்சிகளை விஞ்ஞானிகள் நடத்தி வருகின்றனர்.
அதன் மூலம் பூமியில் ஏற்படும் மாற்றங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நடப்பு ஆண்டில் பூமி குறித்து 34 புதிய ஆய்வு திட்டங்களை நடத்த நாசா முடிவு செய்துள்ளது.
அதன் மூலம் பூமியில் உள்ள தண்ணீர் மற்றும் காற்று வீச்சின் வேகம் கணக்கிடப்படும். அதற்காக இந்தியாவின் இஸ்ரோவுடன் இணைந்து நாசா ஏவுகணை செலுத்துகிறது. இந்த திட்டம் 7 ஆண்டுகள் செயல்படுத்தப்படும். இந்த தகவலை நாசா தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...