Apr 17, 2012

அறிஞர் அண்ணாவும், அவரது ஆங்கிலப் புலமையை சோதித்த‍ நிருபரும் – சுவாரஸ்ய உரையாடல்

அறிஞர் அண்ணா தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத் திலும் மிகுந்த புலமையுடையவர் என்று வெளி நாட்டுப் பத்திரிக்கைகள் எழுதின. அமெரிக்கா விலிருந்து வெளியாகும் “தி சாட்டர்டே ஈவினிங் போஸ்ட்” என்ற பத்திரிக்கைக்கான நிருபர் அண் ணாவைப் பற்றி இவ்வாறு கேள்விப்பட்டதும் என்ன தான் ஆங்கிலம் அறிந்திருந்தாலும் மேல் நாட்டினர் அளவுக்குப் பேச முடியாது என்று இறு மாப்பு டன் எண்ணிக் கொண்டிருந்தாராம். அப்போது அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்கள் அடங்கிய மத்திய அரசின்கூட்டம் ஒன்று டெல்லியில் நடந்தது. அப்போது டெல்லி விமான நிலையத் திலேயேஅண்ணாவை மடக் கிப் பேட்டி காண்பது மட்டுமல்லாமல் அவரது ஆங்கிலப் புலமை யையும் சோதித்துப் பார்த்து விடலாம் என்று எண்ணிய அந்த நிருபர் அவ்வாறே அண்ணாவை ப் பேட்டியும் கண்டாராம். விமானத்தி லிருந்து இறங்கி வெளியே வந்து கொ ண்டிருந்த அண்ணாவைப் பார்த்துத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டா ராம். சரி. கேள்விகளைக் கேளுங்கள் என்று அண்ணா சொன்னவுடன் அந்த நிருபர் கேட்டாராம். “டூ யு நோ யுனொ ? சுவற்றில் அடித்த பந்தாகப் பட்டென்று பதில் வந்ததாம். ஐ நோ யுனொ. யு நோ யுனொ. ஐ நோ யு நோ யுனொ பட் ஐ நோ யுனொ பெட்டெர் தேன் யு நோ யுனொ! கேள்வி கேட்ட நிருபருக்கு மயக்கம் வராத குறை தான். தட்டுத்தடுமாறிக் கேட்டாராம். எக்ஸ்கியூஸ் மீ. சற்று விளக்கமாகக் கூறுங் கள் என்றா ராம். அன்ணா என்ன விளக்கம் சொன்னார் தெரியுமா? I know UNO (United Nations Organization).You know UNO..I know you know UNO.But I know UNO better than you know UNO. அறிஞர் அண்ணாவை ஒருதரம் “தமிழில் அடுக்கு மொழியில் விளையாடுகிறீர்களே, ஆங்கிலத்திலும் முடியுமா?” என்று கேட்டா ர்களாம். கொஞ்சமும் அயராமல் அவர், “ஏன் முடியாது.. எப்படிப்பட்ட வாக்கியம் வேண்டும்?” என்றாராம். “because என்கிற வார்த்தை தொடர்ந்து மூன்று முறை வருமாறு ஒரு வாக்கியம் சொல்ல முடியுமா?” என்று கேட்டதும் அண்ணா அவர்கள் சுரீரென்று அடித்த பன்ச் : ‘No sentence en

உலக அதிசயப்பட்டியலில் இடம்பெறாத தமிழர்களின் கட்டிடக் கலை மற்றும் பொறியியல் அதிசயமான ” இசைத் தூண்கள் ” !!.

இந்த இசைத்தூண்களானது ஒரு நீளமான பாறையை வெட்டி எடுத்து, அதிலிருந் து ஏழு தனித்தனி சிறிய தூண்களாக வடித்துள்ளனர், இந்த ஒவ்வொரு சிறிய தூ ண்களை தட்டினால் ” சப்த ஸ்வர ங்கலான ” ” ச, ரி, க, ம, ப, த, நி ” என்ற தனித் தனி ராகங்களை அது இசைக்கி ன்றது ! . சில பெரிய தூண்களை சுற்றி இடம் பெற்றுள்ள சிறிய தூ ண்களில் ஐம்பத்தி மூன்று தனித்தனி ராகங்களை இசைக்கி ன்றது !! .இதில் பெரிய தூணில் கர்நாட சங்கீதமும்., அதை சுற்றியுள்ள சிறிய தூண்களில் ” மிருதங்கம், கடம், சலங்கை, வீணை, மணி ” போன்ற இசைக் கருவி களின், இசையை தருகின்றது !! அப்படி என் றால் ஒவ்வொ ரு கல்லையும் ஒவ்வொரு பதத்திற்கு இழைத்திருந்தால் தான் இப்படி இது வேறுவே று ஒலிகளில் இசைக்கும்! இதை தட்டுவதால் நம் விரல்களுக்கு எந்த வலியும் ஏற்படு வதில்லை, உண் மையான இசை ஞானம் உள்ளவர்கள் இதை தட்டி னால் இசைக் கருவியில் இருந்து வரும் இசையை விட மிக துல்லி யமாக இது இசைக்கின்றது !.சரி இது எதற்காக பயன்பட்டது ? அந்த க்காலத்தில் இருந்த இசைக் கலை ஞ்சர்கள் இதை கோயில் விழாக்களின் போது, ஒரு இசைக்கருவி யைகூட பயன்படுத்தாமல், இந்த தூண்களை வைத்தே இசைத்து ள்ளனர்! .இது போன்ற வை உலகில் எந்த இடத்திலும் இல்லை என் பது நமக்கு இன்னும் சிறப்பை சேர்க்கின்றது !.இந்த இசைத் தூண்களை “மிடறு” என்று அழைத்தார்கள். இது எப்படி வேலை செய்கின்றது ? ஒவ்வொரு தூண்களில் இருந்து வரும் சப்தமும், ஒவ்வெரு விதமான ” அலைகற்றையை ” உருவா க்குகின்றது !.எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் இது எப்படி சாத்தியமானது ? இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி விஞ்ஞானி ( கல்பாக்கம் ) திரு.”அனிஷ் குமார் ” என்பவரும் அவ ருடன் பணிபுரியும் சிலரும் இதில் ஒளி ந்துள்ள ” இயற்பியல்” அதிசயத்தை முதன்முதலாக தூண் வாரியாக ஆராய் ந்தனர், தூண்களின் வடிவமைப்பு மற்று ம் இந்த தூண்களில் இருந்து எழும் ஒலியை பதிவுசெய்து அளவிடுவது. “In situ metallography ” (used to find out in-service degradation of critical components of process plants operating under high temperature/ high pressure/ corrosive atmosphere) ( ஒரு பொருளின் நுண்ணிய வடிவமைப்பு மற்றும் நுண்ணிய ஓசையை அளக்கும் முறை ) என்ற புதிய தொழில் நுட்பத்தைக்கொண்டு ஆராய்ந்ததில் இந்த தூண்களானது ” தன்மைக்கேற்ப மாறும் ஒரு நிலையான அதிசய திடப்பொருள் ” என தெரிய வந் த து !!. ” spectral analysis “என்ற ஆராய்ச்சிப்படி இந்த தூண்களி ல் வரும் இசையானது” தன் மைக் கேற்ப இசைந்து கொடுக் கும் அலைக்கற்றயினால் ” சப் தம் உருவாவதாக தெரிவிக்கி ன்றது !.சப்தம் உருவாவதே ஒரு அதிச யாமான விஷயம் என்பது ஒரு புறம் இருக்க, இது எப்படி ஒரு விரலால் தட்டினா லே இசை எழுகின்றது ? .நினைவில் கொள்ளுங்கள் நாம் சுத்திய லை கொண்டு அடிக்கப்போவதில்லை, இதற்கு தேவை வெறும் ஒரே ஒரு விரல்! .இசை என்பது காற்றை உள் வாங்கி ஒலியாய் வெளிப்படும் ஒரு முறை, ஆனால் இந்த தூண்களுக்குள் காற்று உள்ளே நுழைந்து இசையை உருவாக்குவதற்கென ஒரு சிறு துவா ரதைக்கூட உருவாக்கவில் லை ! இதைப்பற்றின ஆராய்ச்சிக்கு இந்த “இசைத்தூண்கள் ” ஆயிர ம் ஆண்டுகளுக்கு மேல் வெறு ம் ஆச்சர்யத்தை மட்டுமே பதி லாய் தந்து கொண்டிருக்கின்ற து! அடுத்த ஜென்மம் என்ற ஒ ன்று இருக்கின்றதா என தெரிய வில்லை ! அப்படியே இருந்தா லும் மனிதர்களாக பிறப்போமா என தெரியவில்லை ? அதுவும் குறிப்பாக இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த தமிழ்நாட்டில் பிறப்போ மா என்பது தெரியாதது ! ஆகையால் தாமதப்படுத்தாமல் இது போன்ற இடங்களுக்கு சென்று நம் முன் னோர் செய்த அதிசயங்களை கண்டு களியுங்கள் , இது போன்ற நம் பெருமைகளை உலகறிய செய்யுங்கள் இப்படிப்பட்டவர்கள் வழி யில் வந்த நாம் புதிதாக எது வும் உருவாகவில்லை என்றாலும் அவர்கள் தந்த மொழியையும், கலாச்சாரத்தயுமாவது கட்டிக் காப்போம்!

Apr 16, 2012

கோவிலில் செய்ய கூடாதவை

1.கர்ப்ப கிரஹத்தின் கடவுளுக்கு அலங்காரம் நடக்கும்போது த...ிரையிட்டுருப்பார்கள். அச்சமயம் வழிபடுதல் கூடாது. 2.சுவாமிக்கும் பலி பீடத்திற்கும் குறுக்கே செல்லக்கூடாது. 3.பலிபீடம், விக்ரஹம் ஆகியவற்றின் நிழலை மிதித்தல் கூடாது. 4.ஆலயத்தில் நண்பர்களையோ பெரிய மனிதர்களையோ கண்டால் வணங்க கூடாது. இறைவனே மிகப் பெரியவன். அத்தகைய ஆலயத்தில் அனைவரும் சமம். 5.விபூதி, குங்குமம், பிரசாதம் வாங்கி நெற்றியில் இட்டுக் கொண்டபின் மீதமானவற்றை கீழே கொட்டுதல் சுற்றுத் தூண்களில் தடவுதல், கொட்டுதல் கூடாது. மீதமானவற்றை ஒரு தாளில் மடித்துச் சென்று வீட்டின் பூஜையறையில் வைத்துக் கொண்டு தினசரி இட்டுக் கொள்ளலாம். 6.பிரசாதங்களை ஒருவருக்கொருவர் இட்டுக் கொள்ளுதலும் கூடாது. 7.கோவிலுக்குள்ளேயோ, கோவில் மதிற்புறங்களிலோ எச்சில் துப்புதல், மலம், ஜலம் கழித்தல் கூடவே கூடாது. 8.விபூதி, சந்தன அபிஷேகம், பால் அபிஷேகம் தவிர சுவாமிக்கு இதர திருமஞ்சனம் ஆகும்போது பார்க்க கூடாது. 9.கோவிலில் உள்ள திருவிளக்குகளை கையால் தூண்டவோ தூண்டிய கையை சுவரில் துடைக்கவோ கூடாது. மீதியிருக்கும் எண்ணையை தலையில் தடவிக் கொள்ள கூடாது. 10.சுவாமிகளை தொடுவது, சுவாமிகளின் திருவடிக்கடியில் கற்பூரம் ஏற்றுதல் கூடாது. 11.சட்டை அணிந்து செல்வதை தவிர்ப்பது நல்லது. லுங்கி அணிந்து செல்லுதல் கூடாது. அதிக அழுத்தமான வண்ண உடை ஆடம்பரமான உடை அணிந்து செல்லக் கூடாது. இது மற்றோரின் கவனத்தை திசை திருப்பிவிடும். எளிமையான கதர் துணிகளை அணிந்து செல்லுதல் கூடாது. 12. கோவிலை வேகமாக வலம் வருதல் கூடாது. அடிமேல் அடி வைத்து வலம் வரவேண்டும். மிக நிதானமாக அனைத்து மூர்த்திகளையும் வணங்கிச் செல்ல வேண்டும். 13. எவருடனும் உலக விஷயங்கள், குடும்ப விஷயங்கள் பேசிக்கொண்டு கோவில்களில் வலம் வரக்கூடாது. ஆலயத்தினுள் தெய்வசக்தி நிரம்பியிருக்கும். அச்சக்தி நம் உடலில் ஊடுருவும்படி இறைவனையே மனம் முடிக்க நிரம்பி வலம் வருதல் வேண்டும். 14. போதை வஸ்துக்கள், திண்பண்டங்கள் வாயில் வைத்துக் கொண்டு ஆலயத்தினுள் பிரவேசிக்ககூடவே கூடாது.

ஓவியம் தீட்டும் ரோபோ கண்டுபிடிப்பு

விளையாட்டு சாதனங்களில் தொடங்கிய ரோபோக்கள் படிப்படியாக ஆதிக்கத்தை வளர்த்து கார் தொழிற்சாலைகள், கனரக சாதனங்கள் உற்பத்தி வகையில் புகுந்தன. பின்னர் மருத்துவமனைகளில் சில குறிப்பிட்ட ஆபரேஷன்களையும் வெற்றிகரமாக செய்து சாதனை நிகழ்த்தின. தற்போது ஜெர்மனி நாட்டில் கார்ல்ஸ்ருதி நகரை சேர்ந்த ஒரு நிறுவனத்தினர் ஓவியம் தீட்டும் ரோபோவை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோ முன்பு அமர்ந்தால் போதும் 10 நிமிடங்களில் நமது உருவத்தை மிகவும் தத்ரூபமாக வரைந்து விடுமாம். அதன் செயல்பாடு குறித்து இதனை வடிவமைத்த நிறுவனத்தின் விஞ்ஞானி மார்டினா ரிசெர் கூறுகையில், இதில் உள்ள கேமரா மனித உருவத்தை படம் எடுத்து, நுட்பமான மென்பொருள் உதவியுடன் ரோபோ கரங்களுக்கு அது கட்டளையிடப்பட்டு உருவம் வரையப்படுகிறது என்றார். விரைவில் இந்த ரோபோ சந்தைகளில் அறிமுகமாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Thirai Video - Tamil Live Movies, Videos, Songs. Watch Now, Vijay TV Show, Sun TV, Kalaingar TV Show, Thiraivirunthu, Thiraimovie, Movielanka

Thirai Video - Tamil Live Movies, Videos, Songs. Watch Now, Vijay TV Show, Sun TV, Kalaingar TV Show, Thiraivirunthu, Thiraimovie, Movielanka

உதயநிதி படத்தைப் பார்த்த தந்தை ஸ்டாலின்

கொலிவுட்டில் உதயநிதி ஸ்டாலின் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் படஅதிபரான உதயநிதி நாயகனாக நடித்துள்ள முதல் படம் “ஒரு கல் ஒரு கண்ணாடி” ஆகும். இப்படத்தில் ஹன்சிகா மோத்வானி, சந்தானம், சரண்யா ஆகியோர் நடித்துள்ளனர். நகைச்சுவை இயக்குனர் ராஜேஷ் இயக்க ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். உதயநிதிக்கு முதல்படம் என்றாலும் அவருடைய எதார்த்தமான நடிப்பு திரையுலகில் அனைவரையும் கவர்ந்து விட்டது. இந்நிலையில் உதயநிதி தந்தை ஸ்டாலின் தனது மகன் நடித்த படத்தை திரையரங்கில் மக்களோடு சேர்ந்து பார்த்து மகிழ்ந்துள்ளார். ஸ்டாலின், தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சித் தலைவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்செல்ல

Apr 15, 2012

உங்கள் பாஸ்வேர்டை நினைவில் கொள்ள புதிய மென்பொருள் அறிமுகம்

இன்றைய உலகில் மின்னஞ்சலை(இ-மெயில்) பயன்படுத்தாக நபர்கள் யாரும் இல்லை எனலாம். ஒவ்வொரு நபரும் ஒன்றுக்கு மேற்பட்ட மின்னஞ்சல்களை பயன்படுத்துகின்றனர். எனவே ஒவ்வொரு கணக்கிருக்கும் வெவ்வேறான பாஸ்வேர்ட் கொடுத்து இருப்பதால் அதை அனைத்தையும் ஞாபகம் வைத்து கொள்வது என்பது இயலாத காரியம். இச்சூழ்நிலையில் உங்களது பாஸ்வேர்ட்டை ஞாபகத்தில் வைத்துக் கொள்வதற்கு ஒரு சிறிய மென்பொருள்(சாஃப்ட்வேர்) உதவி புரிகிறது. இந்த சாப்ட்வேர்ரில் உங்களின் அனைத்து பாஸ்வேர்ட் ஐயும் சேமித்து அனைத்திற்கும் சேர்த்து ஒரே ஒரு பாஸ்வேர்ட் கொடுத்து கொள்ளலாம். அதை மட்டும் ஞாபகம் வைத்துக் கொண்டால் போதும். மென்பொருளின் சிறப்பம்சங்கள்: எந்தவொரு நபரும் உங்களது பாஸ்வேர்ட்டை திருடாத படி கடினமான பாஸ்வேர்ட் இந்த மென்பொருள் மூலம் உருவாக்கலாம். குறிப்பிட்ட ஒரு கோப்பை ஒட்டுமொத்த பாஸ்வேர்ட் ஆக தெரிவு செய்யும் வசதி. மின்னஞ்சல், இயங்குதளம் மற்றும் இணையம் என அனைத்திற்கும் தனித்தனியான பாஸ்வேர்ட்டை சேமித்து வைத்துக் கொள்ளும் வசதி. போர்ட்டபிள் மென்பொருள் என்பதால் கணணியில் நிறுவி செய்ய வேண்டிய அவசியமும் இல்லை மற்றும் ஏராளமான வசதிகள் உள்ளது. இதற்கு முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்தால் வரும் ZIP கோப்பை Extract செய்து Key pass என்ற கோப்பை ஓபன் செய்யுங்கள்.அதன் பின் தோன்றும் விண்டோவில் அதில் உள்ள New என்ற பட்டனை அழுத்தவும். அதன் பின் தோன்றும் விண்டோவில் உங்களின் Master pass word தெரிவு செய்து கொள்ளுங்கள் அதன்பின் தோன்றும் விண்டோவில் உங்களின் pass word வகையை தெரிவு செய்து கொண்டு Add Entry என்ற பட்டனை அழுத்தி உங்கள் pass word சேமித்து கொள்ளலாம். இதே முறையில் உங்களையுடைய அனைத்து பாஸ்வேர்ட்களையும் இந்த மென்பொருளில் சேமித்து கொள்ளுங்கள். மேலும் இந்த மென்பொருள் மூலம் மிக கடினமான பாஸ்வேர்ட் களை உருவாக்கலாம். இதற்கு Tools - pass word generate சென்று கடினமான பாஸ்வேர்ட்களை உருவாக்கி கொள்ளலாம். இதன் மூலம் உருவாகும் பாஸ்வேர்ட் தானாகவே இந்த மென்பொருளில் சேமிக்கப்படும்.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...