May 31, 2012


வலிகளுக்கு விரல்களை உருட்டினால் தீர்வு

கை, கால் வலிகளுக்கு விரல்களை உருட்டினால் தீர்வு
சில நேரங்களில் நமக்கு கை கால்களில் வலி ஏற்படுவதுண்டு. அப்பொழுது கைகளை யாராவது அழுத்தி விடமாட்டார்களா? கால்களை சிறு குழந்தைகள் எவராவது மிதித்து விட மாட்டார்களா என்று தோன்றும். வலி நீக்கும் தைலங்களை கை கால்களில் தடவுவோம். மாத்திரைகளை விழுங்குவோம். ஆனாலும் வலி தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். சில வேளைகளில் சிறிது நிவாரணம் கிடைக்கும். இதற்கு முழு தீர்வு கிடைக்குமா என்று ஏங்குவோம். இதற்கு முழுதீர்வு உண்டு.
நாம் சில நேரம் ஆன்மீக பிரசங்களுக்கோ, விழாக்களின் நடக்கும் சொற்பொழிவுகளுக்கோ சென்று தரையில் அமர்ந்திருப்போம். கூட்டம்

பெஞ்சமின் ஃபிராங்க்ளின் (1706 - 1790)


Benjamin Franklin வரலாற்றில் பல்வேறு துறைகளில் மிகச் சிறந்து விளங்கிய மேதை பெஞ்சமின் ஃபிராங்க்ளின் (BenJamin Franklin) எனலாம். இவர் லியோனார்டோ டா வின்சிக்கு (Leonardo da Vinci) இணையாகப் பல்துறைப் புலமை வாய்ந்தவர் எனக் கூறலாம். ஒன்றுக்கொன்று சிறிதும் தொடர்பில்லாத நான்கு தனித்துறைகளில் - வாணிகம், அறிவியல், இலக்கியம், அரசியல் ஆகியவற்றில் இவர் பெரும் வெற்றி பெற்றது வியப்புகுரியது.
வாணிகத்தில் ஃபிராங்க்ளின் பெற்ற வெற்றியை ஆண்டியாக இருந்து அரசனாக உயர்ந்த சாதனைக்கு ஒப்பிடலாம். அமெரிக்காவில் இவர் பிறந்த ஊராகிய பாஸ்டனில் இவருடைய குடும்பம் அத்துணை வசதியுடையதாக இருக்க வில்லை. எட்டாம் வயதில் இவர் பள்ளியில்

புனித அகஸ்டைன் (354-430)


Augustine of Hippo ரோமானியப் பேரரசு வீழ்ச்சியுற்று வந்த ஆண்டுகளில் வாழ்ந்த அகஸ்டைன், தம் காலத்தில் தலைசிறந்த இறைமையியலறிஞராக விளங்கியவர். இவருடைய எழுத்துகள் மத்திய காலம் முழுவதிலும் கிறிஸ்துவக் கோட்பாடுகளிலும், மனப்பான்மைகளிலும் பெருமளவில் செல்வாக்குச் செலுத்தின. இன்றுங்கூட இவரது கொள்கைகள் செல்வாக்குடன் திகழ்கின்றன.
இன்றைய அல்ஜீரியாவின் கௌ-அக்ராஸ் என்று அழைக்கப்படும் அன்றைய டாகஸ்டே நகரில் 354 ஆம் ஆண்டில் அகஸ்டைன்

அரிஸ்டாட்டில் (கி.மு.384 - கி.மு.322)


Aristotle பண்டைய உலகில் தலைசிறந்த தத்துவஞானியாகவும், விஞ்ஞானியாகவும் திகழ்ந்தவர் அரிஸ்டாட்டில். இவர் முறையான தருக்கவியல் ஆராய்ச்சியைத் தோற்றுவித்தார். தத்துவத்தின் அனைத்துத் துறைகளையும் வளப்படுத்தினார்; அறிவியலுக்கு அளவிறந்த அருந்தொண்டுகள் புரிந்தார். அரிஸ்டாட்டிலின் கொள்கையில் பல இன்று காலங்கடந்தனவாகி விட்டன. எனினும், இவருடைய தனிக் கோட்பாடுகளை

ஆர்க்கிமிடீஸ் (கி.மு. 287 - கி.மு. 212)




Archimedes பண்டைய உலகின் தலைசிறந்த கணித மேதையாகவும் விஞ்ஞானியாகவும் போற்றப்படுபவர். ஆர்க்கிமிடீஸ் ஆவார். நெம்புகோலின் தத்துவத்தையும் வீத எடைமான (specific Gravity) கோட்பாட்டையும் கண்டுபிடித்தவர் ஆர்க்கிமிடீஸ் தான் என்பர். எனினும், உண்மையில் ஆர்க்கிமிடீசுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நெம்புகோல் அறியப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வந்தது. நெம்புகோலின் செயல் விளைவை விவரிக்கும் சூத்திரத்தை முதன் முதலில் வகுத்துரைத்தவர் ஆர்க்கமிடீஸ் தான் என்று தெரிகிறது. ஆனால், ஆர்க்கிமிடீசுக்கு நெடுங்காலத்திற்கு முன்னரே, எகிப்தியப் பொறியியல் வல்லுநர்கள் நெம்புகோல்களைப் பயன்படுத்துவதில் தேர்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள்.
அதே போன்று, ஒரு பொருளின் மொத்த எடைக்கு மாறான அப்பொருளின்

அந்துவான் லோரான் லாவாசியர் (1743 - 1794)


Antoine Laurent Lavoisier பெரும் ஃபிரெஞ்சு அறிவியலாளரான அந்துவான் லோரான் லாவாசியர் இரசாயனவியல் வளர்ச்சிக்குப் பெருந்துணை புரிந்தவராவார். 1743 இல் அவர் பாரிசில் பிறந்தபோது, இரசாயனவியலானது இயற்பியல், கணிதம், வானவியல் ஆகியவற்றை விட பின் தங்கிய நிலையிலிருந்தது. அப்போது இரசாயனவியலார் தனிப்பட்ட உண்மைகள் பலவற்றைக் கண்டுபிடித்திருந்தனர். ஆயினும் சிதறிய இச் செய்திகளை ஒருங்கிணைக்கக் கூடிய

அலெக்சாண்டர் கிரகாம் பெல் (1847-1922)


Alexander Graham Bellதொலைபேசியைக் கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரகாம் பெல், ஸ்காட்லாந்திலுள்ள எடின்பரோவில் 1847 ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் சில ஆண்டுகளுக்கு மட்டுமே முறையான பள்ளிக் கல்வி கற்றபோதிலும், இவருடைய குடும்பத்தினர் இவருக்குச் சிறந்த கல்வி கற்பித்தனர். இவர் தாமாகவும் உயர்ந்த கல்வி கற்றுக் கொண்டார். இவருடைய தந்தை, குரல் உறுப்புப் பயிற்சியிலும், பேச்சுத் திருத்த முறையிலும், செவிடர்களுக்கு கல்வி கற்பிப்பதிலும் ஒரு வல்லுநராகத் திகழ்ந்தார். எனவே, குரல் ஒலிகளை

ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன் (1879 - 1955)


Albert Einstein இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த விஞ்ஞானியாகவும், ஒப்புயர்வற்ற அறிஞராகவும் விளங்கிய ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவரது சார்புக் கொள்கை க்காக (Theory of Relativity) உலகப் புகழ் பெற்றவர். இவர் வகுத்தமைத்த சார்புக் கொள்கையில் உண்மையில் இரு கொள்கைகள் அடங்கியுள்ளன. ஒன்று "சிறப்புச் சார்புக் கொள்கை" (Special Theory of Relativitiy) இது 1905 இல் வகுத்தமைக்கப்பட்டது. இன்னொன்று " பொதுச் சார்புக் கொள்கை" (General Theory of Relativity) இது 1915

ஆடம் ஸ்மித் (1723-1790)


Adam Smith பொருளாதாரக் கோட்பாட்டு வளர்ச்சியில் மிகுந்த செல்வாக்குப் புகழ் வாய்ந்தவராகத் திகழ்ந்தவர் ஆடம் ஸ்மித். இவர் ஸ்காத்லாந்திலுள்ள கிரிக்கால்டி நகரில் 1723ஆம் ஆண்டில் பிறந்தார். இளமையில் ஆக்ஸ்போர்டுப் பல்கலைக் கழகத்தில் 1751 முதல் 1764 வரையில் ஒரு தத்துவப் பேராசிரியராகப் பணியாற்றினார். அங்கு பணியாற்றிக் கொண்டிருந்தபோது, "அறநெறி உணர்வுகள் பற்றிய கோட்பாடு (Theory of Moral Sentiments) என்ற தமது முதலாவது நூலை வெளியிட்டார். இந்நூல் இவருக்கு அறிஞர்கள்

புத்தர் (கி.மு.563-கி.மு.483)


Buddha இளவரசர் சித்தார்த்தர் எனும் இயற்பெயருடைய கௌதம் புத்தர் பெரும் சமயங்களுள் ஒன்றான பௌத்த சமயத்தை நிறுவியவராவார். சித்தார்த்தர் வடகிழக்கு இந்தியாவில் நேப்பாள எல்லையின் அருகிலுள்ள கபில வஸ்து எனும் நகரை ஆண்டு வந்த மன்னரின் மைந்தர் (கௌதம குடும்பத்தையும் சாக்கிய குலத்தையும் சேர்ந்த) சித்தார்த்தர் இன்றைய நேப்பாள எல்லைக்குள்ளிருக்கும் லும்பினியில் கி.மு. 563 இல் பிறந்ததாகக் கூறப்படுகின்றது. அவர் தமது 16 ஆம் வயதில் ஒத்த வயதுள்ள உறவினளைத் திருமணம் செய்து கொண்டார். செல்வம் கொழிக்கும் அரண்மனையில் பிறந்த சித்தார்த்தர் இளவரசருக்கு இன்ப நலன்களுக்குக் குறைவில்லை. ஆயினும் அவர் ஆழ்ந்த அதிருப்தியடைந்திருந்தார். மனிதருள் பலர்

அகஸ்டஸ் சீசர் (கி.மு.63 - கி.பி.4)


Augustus Cesar ரோமானியப் பேரரசு நிறுவிய அகஸ்டஸ் சீசர், வரலாற்றில் தலைமை சான்ற பெரியார்களில் ஒருவராவார். கி.மு. முதல் நூற்றாண்டில் ரோமானியக் குடியரசைச் சீர்குலைத்த உள்நாட்டுப் போர்களை இவர் முடிவுக்குக் கொண்டு வந்தார். ரோமானியப் பேரரசின் அரசைச் செம்மையாக சீரமைத்து இரு நூற்றாண்டுக் காலம் இப்பேரரசு உள்நாட்டு அமைதியோடும், செல்வச் செழிப்போடும் விளங்குவதற்கு அடிகோலினார்.

இவருடைய உண்மைப் பெயர் காயஸ் ஆக்டேவியஸ் ஆகும். ஆக்டேவியஸ் என்ற பெயரே பெரும்பாலும் இவருக்கு வழங்கி

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...