Sep 10, 2012

சீன அமைதி விருதுக்கு பில்கேட்ஸ் பெயர் பரிந்துரை!

சீன அமைதி விருதுக்கு பில்கேட்ஸ் பெயர் பரிந்துரை
சீன அமைதி விருதுக்கு ஐ.நா. முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் உள்ளிட்டோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. கன்பூஷியஸ் அமைதி விருதுக்கு பரிந்துரை செய்யப்படுபவர்களின் பெயர்கள் நேற்று அறிவிக்கப்பட்டன.
சீன அரசின் சிபாரிசு எதுவும் இல்லாமல், சுதந்திரமாக முடிவெடுத்தே இப்பெயர்களை அறிவித்ததாக விருதை வழங்கும் குழுவினர் தெரிவித்துள்ளனர். ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி,மூன், தாய்லாந்து பிரதமர் யிங்லக் ஷினவத்ரா, சீன சமூக சேவகர் வாங் டிங்கோ, பீகிங் பல்கலை. பேராசிரியர் டேங் யீஜி, சீன விஞ்ஞானி யுவான் லாங்பிங், 11வது பன்சென் லாமா ஆகியோரின் பெயர்களும் இவ்விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
திபெத்திய மத தலைவர் தலாய் லாமாவுக்கு அடுத்து 2வது நிலையில் உள்ளவர் பன்சென் லாமா. ஆனால், இவர் சீன அரசால் நியமிக்கப்பட்டவர் என்பதால் இவரை திபெத்தியர்கள் மதத்தலைவராக ஏற்றுக்கொள்வதில்லை.

எண் 9 யில் பிறந்தவருக்குரிய முழு பலன்கள்

எண் 9 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் – செவ்வாய் (Mars):
இயற்கையிலேயே துடிப்பும், வேகமும் கொணட் 9 எண்காரர்களின் சிறப்பு இயல்புகளை இங்கு விவரமாகப் பார்ப்போம். இந்த எண்ணின் நாயகர் முருகப் பெருமான் அவரே தேவர்களுக்குச் சேனாதிபதியாவார். எனவே சேனாதிபதிக்குள்ளகட்டுப்பாடும், திறமையும், சவால்களைத் துணிந்து எதிர்கொள்ளும் தன்மையும் இவர்களுக்கு உண்டு. இரத்தத்தைப் பார்த்து இவர்கள் பயப்பட மாட்டார்கள். தெருச் சண்டை, யுத்தக்களம் போன்ற இடங்களில் இவர்களைப் பார்க்கலாம். மேலும் அதிகாரமுள்ள காவல்துறை, இராணுவம் ஆகிய தொழிலில் மிகவும் விருப்பம் உடையவர்கள் இவர்கள்தான்! மற்றவர்கள் பயப்படும் காரியங்களைத் துணிந்து ஏற்றுக் கொள்வார்கள். துணிவே துணை என்று நடை போடுவார்கள்.
இவர்களுக்கு முன்கோபமும் படபடப்பும் உண்டு. உடலும் சற்று முறுக்கேறி

எண் 8 யில் பிறந்தவருக்குரிய முழு பலன்கள்

மனிதர்கள் எப்போதும் இன்பத்தையே தேடி ஓடுகிறார்கள். “சுவையாக இருக்கிறது” என்று அதிகமாக இனிப்புகள் சாப்பிட்டுவிட்டு, அதன் பின்பு செரிமாணம் ஆகாமல், வயிறு சரியில்லை, சர்க்கரை நிலை உடம்பில் ஏறிவிட்டது என்று தவிப்பவர்கள்தான் இன்றைய உலகில் அதிகம்! அரிய நெல்லிக்கனியானது சாப்பிடும்போது கசக்கும். ஆனால் சாப்பிட்ட பின்பு மிகவும் இனிக்கும். மேலும் உடலின் ஆரோக்கியத்திற்கும் இந்தக் கனி மிகவும் சிறந்தது! இருப்பினும் நெல்லிக்கனியைச் சாப்பிடும்போது கசப்பு என்ற காரணத்திற்காகப் பெரும்பாலோர் சாப்பிடுவதில்லை!
அது மட்டுமன்று மனிதன் மற்ற எல்லாவற்றையும்விடத் தன் நாக்கிற்கே அடிமையாக இருக்கிறான்! நினைத்துப் பாருங்கள்! தொண்டைக்குக் கீழ் எந்த உணவுப் பொருள்கள், பானங்கள் சென்றாலும் ஒன்றுதான். நாக்கிற்கு கீழே சென்றுவிட்டால், எந்தப் பொருளுக்கும் எந்தச் சுவையும் இல்லை! இருப்பினும் மக்கள் தங்களின் உடல்நலம் பாராது நாக்கின் சுவைக்காகவே

எண் 7 யில் பிறந்தவருக்குரிய முழு பலன்கள்


எண் 7 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் – கேது (Dragon’s Head) :
இப்போது இல்லற சந்நியாசிகளாக 7ம் எண்காரர்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். சோதிட நூல்கள் எல்லாம் இந்தக் கேதுவைப் பற்றி மிகவும் பயமுறுத்துகின்றன. கேதுவைப் போல் கெடுப்பானில்லை! இராகுவைப் போல் கொடுப்பானில்லை என்று சோதிட சாத்திரங்கள் கூறுகின்றன. இவர் விஷ்வபாகு என்ற அரக்கனேயாவார். (புராண காலத்தில்) பல்வேறு காரணங்களினால் தேவர்கள் மிகவும் பலவீனமாகவும் சோர்ந்தும் இருந்தார்கள். அசுரர்களைவிட தேவர்கள் மிகவும் பலம் குன்றியிருந்தனர். அசுரர்களின் செல்வாக்கு அப்போது ஓங்கியிருந்தது! தங்களது பலவீனத்தை எப்படி போக்குவது என்ற சிந்தனையில் தேவர்கள் ஆழ்ந்தனர்.
மகா விஷ்ணுவின் ஆலோசனைப்படி தேவர்களும், அசுரர்களும் (இவர்கள்

எண் 6 யில் பிறந்தவருக்குரிய முழு பலன்கள்

ஒன்பது எண்களிலும் இயற்கையிலேயே அதிர்ஷ்டசாலிகளான 6ம் எண்காரர்களைப் பற்றிப் பார்ப்போம். இந்த உலகத்தைப் பற்றி மட்டு நினைப்பவர்கள் இவர்கள்தான். பூர்வ ஜென்மம், அடுத்த ஜென்மம் போன்றவற்றில் அதிகம் நம்பிக்கையில்லாதவர்கள். அது மட்டுமல்ல அப்படிப் பேசுபவர்களைக் கண்டால் கிண்டலும், குதர்க்கமும் செய்வார்கள்.
இன்பம், பணம், சுகமான அனுபவங்கள் நோக்கிலே இவர்கள் ஓடுவார்கள்!  இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழில் மிகவும் ஈடுபாடு உடையவர்கள். நீடித்த இளமை இவர்களது வரப்பிரசாதமாகும். மன்மதர்களின் மைந்தர்கள் இவர்களே புத்திரபாக்யம் நிறைந்தவர்கள் இவர்கள்தான். அதிலும் பெண் குழந்தைகள் இவர்களுக்கு அதிகம் உண்டு. பணவிஷயத்தில் இவர்களே மிகவும் அதிர்ஷ்டமானவர்கள். இவர்களே குபேரனின் மைந்தர்கள்! எவர் மூலமாவது எப்படியாவது இவர்களுக்குச் சமயத்திற்கு ஏற்பப் பணம் வந்து கொண்டே இருக்கும். சாப்பிடுவதிலும்,

எண் 5 யில் பிறந்தவருக்குரிய முழு பலன்கள்


இந்த எண் அனைவராலும் மிகவும் விரும்பப்படும் எண்ணாகும். அனைத்து எண்களுக்கும் இந்த எண் பொதுவாக உள்ளது. மிக நன்மையும், அதிர்ஷ்டமும் தருவது இந்த எண்ணாகும். புதனின் ஆதிக்கம் வலுத்து இருப்பவர்களுக்குப் பெருத்த யோகங்களைக் கொடுக்கும். புதனின் எண் இல்லாதவர்களுக்கும்கூட இந்த ஆதிக்கமானது, நல்ல பலன்களைத் தரவல்லது! இதனாலேயே பெரும்பாலான எண் சோதிடர்கள், பெயர் எண் 5 ஆக வரும்படி அமைத்துக் கொடுக்கிறார்கள். மற்ற அதிர்ஷ்ட எண்களான 1, 3, 6, 9 ஆகியவைகள் (அந்தக் குறிப்பிட்ட எண்ணானது) நல்ல அமைப்புடனும், வலுவுடனும் அன்பர்களுக்கு இருந்தால் தான் நன்மை புரியும். இல்லையெனில் தீய பலன்களைக் கண்டிப்பாக கொடுத்துவிடும். உதாரணமாக 3 ம் எண்ணில் பிறந்தவர்களுக்கு 24, 33, 42, 51 ஆகிய 6 எண்ணின் வர்க்கங்கள் எந்த ஒரு

எண் 3 ல் பிறந்தவருக்குரிய முழு பலன்கள்


ஒன்பது எண்களில் 3ம் எண்ணிற்குத் தனிச்சிறப்பு உண்டு. தேவகுருவான பிரகஸ்பதிக்கு உரியது. எப்போதுமே அடுத்தவர்க்கு நல்லது மட்டுமே செய்பவர்கள் இவர்கள்தான். இவர்களது திறமையையும், புத்திசாலித் தனத்தையும் மற்றவர்கள் பயன்படுத்திக்கொண்டு, இவர்களுக்குரிய மரியாதையைச் செய்ய மாட்டார்கள்.
தன்னை நம்பி வருவோர்க்கு நிச்சயம் உதவி செய்வார்கள். தங்களை மற்றவர்கள் மதிக்க வேண்டும், தங்களது ஆலோசனைகளையும் கேட்க வேண்டும் என்று மட்டும் மிகவும் எதிர்பார்ப்பார்கள். முகஸ்துதி செய்வதன் மூலம் மற்றவர்கள் இவர்களைப் பயன்படுத்திக் கொள்வார்கள். தங்களது உடை விஷயத்திலும், தங்களை அழகுபடுத்திக் கொள்ளும் விஷயத்திலும் ஆர்வமாக இருக்க மாட்டார்கள். மானத்தை மறைப்பதற்காக உடை

எண் 2 ல் பிறந்தவருக்குரிய முழு பலன்கள்-

இந்த 2ம் எண்ணைப் பற்றி அனைத்து நூல்களும் மக்களை தேவையில்லாமல் பயப்படுத்துகின்றன. உண்மை அதுவன்று. பெரும் மரங்கள் சாய்ந்தாலும் நாணல் மட்டும் நிலைத்து நிற்கம். ஒவ்வொருவர் வாழ்விலும் புயல் (சோதனைகள்) என்பது நிச்சயம் ஏற்படும். அதற்கு எந்த எண்ணும் விதிவிலக்கல்ல. மற்ற எண்காரர்கள் துவண்டு விடும்போது இவர்கள் மட்டும் வாழ்க்கையின் சோதனைகளில் வளைந்து கொடுத்து, முன்னேறி விடுவார்கள். அம்பாளின் அருள் பெற்ற எண் இது.
பகலுக்கு இராஜா சூரியன் என்றால் இரவுக்கு ராணி சந்திரன். சூரியன் தந்தைகாரன் சந்திரன் மாதாகாரகன். எனவே இந்த எண்காரர்களிடம் பெண்மையும், மென்மையும் உண்டு. இவர்கள் ஓரளவு தடித்த தேகத்தினர்தாம்.

எண் 1 யில் பிறந்தவருக்குரிய பலன்கள்


ண் 1 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் – சூரியன் (Sun) :
எல்லா எண்களுக்கும் இந்த முதலாம் எண்ணே தலைமை வகிக்கிறது. நமது சூரியக் குடும்பத்தின் தலைவனான சூரியன்தான் இதனை ஆட்சி செய்கிறார். இந்த எண்ணில் பிறனந்த‌வர்கள் பழகுவதற்கும், பார்வைக்கும் கம்பீரமானவர்கள். தன்னம்பிக்கை இவர்களிடம் அதிகம் இருக்கும். இவர்கள் மற்றவர்களைக் கடுமையாக வேலை வாங்குவார்கள். ஆனால் அதே சமயம் மனித நேயத்துடனும் அவர்களுடன் நடந்த கொள்வார்கள். மற்றவர்களிடம் எதையும் எதிர்பார்க்க மாட்டார்கள். தங்களின் பிரச்சினைகளைக் கூடத் தாங்களே சமாளித்துக் கொள்ளும் திறமையுடையவர்கள். அடுத்தவர்களுடன் விவாதித்தால் கௌரவம் போய்விடும் என்று நினைப்பவர்கள்.
அரசியல் அல்லது அரசு சார்ந்துள்ள தொழில்கள், உத்தியோகங்கள்

எண் 4 யில் பிறந்தவருக்குரிய முழு பலன்கள் -உங்களை பற்றி தெரிஞ்சுகொள்ளுங்கள்!


இப்போது சர்வவல்லமையுள்ள இராகு பகவானின் ஆதிக்கத்திற்குரிய எண்ணான 4&ஐப் பற்றிப் பார்ப்போம். (சாதகத்தின்படி) நவக்கிரகங்களின் (நைசிக பலம்) பலத்தில், இராகு பகவான் தான் பலவான் என்றாலும், எண்களை சாத்திரத்தில் நான்கு எண் அவ்வளவு வலிமை மிகுந்த எண்ணாகச் சொல்லப்படவில்லை! சூரியனின் எண்ணான 1 ஆம் எண்ணைச் சார்ந்தே இதன் பலன்களும், நடைமுறைகளும், அதிர்ஷ்டங்களும் உள்ளன! மேலும் 1&ம் எண்ணிற்கு மிகவும் நட்புடையதாகவும் விளங்குகிறது.
வெளிநாட்டு எண்கணித மேதைகள் இதை (4 எண்) யுரேனஸ் என்னும் கிரகத்தின் ஆதிக்கத்தின் கீழ் இருப்பதாகக் கூறுகிறார்கள். இவர்கள் வாய்ப் பேச்சில் இன்பம் காண்பவர்கள். நாவன்மை அதிகமுள்ள இவர்கள் வீட்டிலும், ரோட்டிலும், காபி, டீக்கடைகளிலும், கோவில்களிலும் ஆற்றங்கரையிலும், கடற்கரையிலும், கையை ஆட்டி, குரலை ஏற்றி, இறக்கி, உணர்ச்சியுடன் பேசி

நியூயார்க் நகரை சூறாவளி புயல் தாக்கியது: வீடுகள் தரை மட்டம்


 
அமெரிக்காவில் அட்லாண்டிக் கடலை ஒட்டிய வட கிழக்கு மாகாணங்களில் சூறாவளி புயல் வீசுகிறது. இப்புயல் நியூயார்க் நகரை நேற்று முன்தினம் கடுமையாக தாக்கியது. அடுத்தடுத்து 2 சூறாவளி புயல்கள் தாக்கின.
 
முதலில் வீசிய புயல் காற்றில் வீடுகளின் கூரைகள் பறந்தன. மரங்கள் தூசிகளும், மணலும் வாரி இறைக்கப்பட்டது. அடுத்த 20 நிமிடங்களில் மற்றொரு புயல் தாக்கியது. இது மிகவும் கடுமையாக இருந்தது. நியூயார்க்கில் அதை சுற்றியுள்ள 10 மைல் சுற்றளவும் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. இத் தாக்குதலில் வீடுகள் தரை மட்டமாயின. மரங்கள் வேருடன் சாய்ந்தன. ரோடு களில் சென்ற கார் உள்ளிட்ட வாகனங்கள் தலை குப்புற கவிழ்ந்தன. மின்சாரமும் டெலிபோன்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...