Oct 6, 2012

ஆக்சிஜன் இன்றி விண்வெளியில் 553 நாட்கள் உயிர்வாழும் பாக்டீரியாக்கள்!



ஆக்சிஜன் இல்லாத இடத்தில் பாக்டீரியாக்கள் எத்தனை நாட்கள் உயிர்வாழும் என விண்வெளி விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதற்காக இங்கிலாந்தில் தெற்கு கடற்கரையில் உள்ள ஒரு மலையின் செங்குத்தான பாறையில் இருந்து சில பாக்டீரியாக்களை சேகரித்தனர்.


அவற்றை ஆக்சிஜன் இல்லாத விண்வெளிக்கு எடுத்து சென்றனர். அங்கு வைத்து சோதனை செய்தனர். அப்போது அந்த பாக்டீரியாக்கள், 553 நாட்கள்

பூமியை மாசடைய செய்யும் முதல் ஏழு நாடுகளில் ஆஸ்திரேலியா, டென்மார்க்!



உலக வன உயிரியல் நிதியம் (WWF) நடத்திய கணக்கெடுப்பு ஒன்றில் சுற்றுச் சூழல் மாசடைவதில் உலக நாடுகள்வகிக்கும் பங்கில் அவுஸ்திரேலியா 7 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் அவுஸ்திரேலியாவில் அமைந்துள்ள தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கார்பன் வாயுவும், அதிகரித்து வரும் சனத்தொகை மற்றும் வாகனப் போக்குவரத்தும் ஆகும் என

கெட்ட கொழுப்பினால் ஏற்படும் விளைவுகள்!



நமது உடலில் தீமை விளைவிக்கும் கொழுப்பு, நன்மை தரும் கொழுப்பு என இரண்டு வகைகள் உள்ளது. இரண்டுமே சம அளவில் இருந்தால் மட்டுமே உடல் நிலை சமநிலைப்படும்.தீமை பயக்கும் கொழுப்பின் அளவு அதிகரித்தால் உடல் பருமன், இதய பாதிப்புகள் ஏற்படும். அது மட்டுமின்றி மூளை செயல்பாடு, நினைவாற்றலும் பாதிக்கப்படும் என்பது தற்போதைய ஆய்வில் தெரியவந்தது.


அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள ப்ரிகாம் அண்ட் உமன்ஸ் மருத்துவமனை இதுதொடர்பாக 4 ஆண்டுகால தொடர் ஆய்வு நடத்தியது. முதல்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்ட 40 ஆயிரம் பெண்களின் மருத்துவ

சீனாவில் காணப்படும் இராட்சத சலமண்டர்கள்!



பல்லியின் தோற்றத்தைக் கொண்ட சலமண்டர்கள் எனப்படுவது பொதுவாக நீர் நிலைகளில் வாழும் ஊர்வன இனத்தைச் சார்ந்த விலங்கு ஆகும்.சிறிய இனத்தைச் சேர்ந்த சலமண்டர்கள் வாலின் நீளம் உள்ளடங்கலாக 2.7 சென்டிமீட்டர்கள் வரை வளரக்கூடியன. ஆனால் சீனாவில் காணப்படும் சலமண்டர்கள் சுமார் 1.8 மீட்டர்கள் நீளமானதாக

நாய் எப்படி மோப்பம் பிடிக்கிறது



உலகம் முழுவதும், பிலட்த்ஹௌந்து எனப்படும் நாய்தான் துப்பறிவதற்கு அதிகம் பயன்படுகிறது. காணாமல் போன குழந்தைகளைப் பிடிப்பதற்கு பேர் போனது. பொதுவாக நாய்கள் மனிதனைவிட 50 மடங்கு மோப்ப சக்தி மிக்கது என்றாலும், பிலடுவிடம் ஏராளமான மோப்ப செல்கள் உள்ளன. மனிதனிடம் 10/ச.செ.மீ. பிலடுக்கு 170/ச.செ.மீ. பரப்பில் மோப்ப செல்கள் உள்ளன. நீங்கள் அடுப்பங்கரையில் நுழையும்போது கறிவாசனை வந்தால் அது கொஞ்ச நேரத்தில் நமக்குத் தெரியாமல் போய் விடுகிறது. ஆனால் மோப்ப நாய்க்கு அப்படி இல்லை. எப்படி இவை மோப்பம் பிடிக்கின்றன தெரியுமா..? நம் உடலிலிருந்து விழுந்த

பனிக்கட்டி ரகசியமும் பனி ஊழிக்காலமும்!



நம் பூமியில் சுமார் 70 % நீர் உள்ளது. இந்த நீர்தான் உயிர்களின் ஆதாரம். நீரின்றி உயிரில்லை. வட தென் துருவங்களில் பனி உறைந்து போய் கிடக்கிறது. மனிதன் தவிர பிற உயிரினங்கள் அந்த வாழ்நிலைக்குத் தகுந்தாற்போல் தம்மை தகவமைத்துக் கொண்டு வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. பனிப்பாறை இன்றி பனிக்கரடி, பனி சிறுத்தை, பெங்குவின், பனி நரிகள், சீல், மற்றும் பனிக்கட்டிகளில், அந்த உறைப் பனிக்குளிரை அனுபவித்து, சந்தோஷமாய் விளையாடி வாழும் விலங்கினங்கள்,, ஏராளம், ஏராளம். அந்த விலங்கினங்கள் பற்றி இன்னும் முழுமையாக நமக்குத் தெரியவில்லை.

மனித இனத்தை விரைவாக அழிக்கப் புறப்படும் சூப்பர் வொல்கனோக்கள் : அமெரிக்க ஆய்வில் தகவல்



அமெரிக்கா உட்பட உலகின் முக்கியமான பல நாடுகளில் காணப்படும் சூப்பர் வொல்கனோ எனும் உயிர் எரிமலைகள் இதுவரை கணிக்கப் பட்டதை விட மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்த வல்லதுடன் மனித இனத்தை மிக வேகமாக அளிக்கக் கூடியன என்றும் சமீபத்தில் அமெரிக்காவில் மேற்கொள்ளப் பட்ட ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப் பட்டுள்ளது.


இவ் எரிமலைகள் ஏற்படுத்தக் கூடிய ஆபத்து மிகப் பெரிய எரிகல் ஒன்று பூமியுடன் மோதினால் ஏற்படும் விளைவை விட மோசமானது என்றும் கூறப்படுகின்றது. மேலும் சுமார் 100 000 வருடங்களாக உயிர்ப்புடன் உறங்கிக்

தண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி



ஒரு நாணயத்தை தண்ணீரில் போட்டால் மூழ்கிவிடுகிறது. ஆனால், ஒரு பிரம்மாண்டமான கப்பல் தண்ணீரில் மிதக்கிறதே. மீனவர்கள் பயன்படுத்தும் படகு, மரம் போன்ற மிதக்கும் பொருள்களால் செய்யப்பட்டாலும், மிகப் பெரிய கப்பல்கள் இரும்பு போன்ற உலோகத்தால் செய்யப்படுகின்றன. அப்படியானால் அந்தக் கப்பல்கள் மூழ்கிவிட வேண்டுமே, எப்படி மிதக்கின்றன?கப்பல் தண்ணீரில் இருக்கும்போது, அதன் உடற்பகுதி ஓரளவு

முத்துகள் உருவாகுவது எப்படி?



முத்து என்பது ஆபரணங்களில் பயன்படுத்தப்படும் ஒருவகைப் பொருளாகும். இது இயற்கையில் நீரில் வாழுகின்ற முசெல் (mussel) வகையைச் சேர்ந்த முத்துச்சிப்பி போன்ற சில உயிரினங்களிலிருந்து பெறப்படுகின்றது. மிகப் பழங் காலத்திலிருந்தே முத்து விரும்பி வாங்கப்படும் ஒன்றாக இருந்து வந்துள்ளது.


உயர் தர முத்துகள் எப்படி உருவாகின்றன என்றால், கடலில் உள்ள சில புல்லுருவிகள் (தம்மால் நேரடியாக உணவுப்பொருட்களை உருவாக்க முடியாமல் சத்துக்காக பிற தாவர இனங்களைச் சார்ந்திருப்பவை), சிலநேரங்களில் சிப்பியின் வாய் வழியாக உள்ளே தவறிச் சென்று விடுகின்றன.அப்போது சிப்பியின் உட்பாகத்தில் ஓர் உறுத்தல் ஏற்பட்டு, நாக்கர் திரவத்தை அதன் மீது பொழியும். அவ்வாறு பொழியும்போது அந்தப்

எப்போது தாகம் ஏற்படுகின்றது


தாகம் எப்போது ஏற்படுகிறது? அதற்கான காரணம் என்ன?
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் பூமியானது மாறிமாறி வெப்பமும் குளிர்ச்சியும் வருகின்ற பருவ நிலைகளைக் கொண்டது.
கோடைக்காலங்களில் குறிப்பாக மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் அதிகமாக தாகம் எடுக்கின்றது. அதன் காரணமாக அதிகமான தண்ணீரைப் பருகுவோம். பொதுவாகவே நம் உடலானது பருவநிலைச் சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாது உடல் வெப்பநிலையை உடல் உள்உறுப்புகள் சீராகவே வைத்திருக்கின்றன. கோடைக்காலத்தில் அதிகப்படியான வெப்பம் நம் தோலின் மீது விழுகின்றபோது அதன் மூலமாக அதிகப்படியான நீர் வியர்வை மூலமாக

பறவைகளின் அறிவியல் பெயர்



•கொக்கு - குருயிடேகுரியுபோர்ம்ஸ்புறா - கோலம்புடே கொலம்தபிபோர்ம்ஸ்
•ஆந்தை - நாக்டர்நாவிஸ் ஸ்டிரிஜிபோர்ம்ஸ்
•காகம் - கோர்வஸ் கோரோன்
•பென்குயின் - பென்றாகோனிகா லன்சிபோர்ம்ஸ்
•அன்னம் - சிக்னஸ் கோஸ்கோராபா
•கறுப்பு அன்னம் - சிக்னஸ் அட்ராடஸ்
•குயில் - குகுலிடே குகுலிபோர்ம்ஸ்
•வாத்து - அனாடிடே ஆன்செரிபோர்ம்ஸ்
•மயில் - பாவாகிறிஸ்டாடஸ்
•சிட்டுக்குருவி - புளோசிடே பாசர்
•கழுகு - அக்குலா அசதிபிடிரிடே
•தீக்கோழி - ஸ்டுருதியோ கேமெலஸ்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...