Oct 6, 2012

கெட்ட கொழுப்பினால் ஏற்படும் விளைவுகள்!



நமது உடலில் தீமை விளைவிக்கும் கொழுப்பு, நன்மை தரும் கொழுப்பு என இரண்டு வகைகள் உள்ளது. இரண்டுமே சம அளவில் இருந்தால் மட்டுமே உடல் நிலை சமநிலைப்படும்.தீமை பயக்கும் கொழுப்பின் அளவு அதிகரித்தால் உடல் பருமன், இதய பாதிப்புகள் ஏற்படும். அது மட்டுமின்றி மூளை செயல்பாடு, நினைவாற்றலும் பாதிக்கப்படும் என்பது தற்போதைய ஆய்வில் தெரியவந்தது.


அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள ப்ரிகாம் அண்ட் உமன்ஸ் மருத்துவமனை இதுதொடர்பாக 4 ஆண்டுகால தொடர் ஆய்வு நடத்தியது. முதல்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்ட 40 ஆயிரம் பெண்களின் மருத்துவ குறிப்புகள் அலசி ஆராயப்பட்டன. அடுத்த கட்டமாக இதில் இருந்து 65 வயதுள்ள 6 ஆயிரம் பெண்கள் தெரிவு செய்யப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டனர். தீமை பயக்கும் கொழுப்பு சத்து உணவுகளை அதிகம் சாப்பிட்டவர்களின் மூளை செயல்பாடுகள், நினைவாற்றல் பாதிக்கப்பட்டிருந்தது.உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு இருந்தால் இந்த பாதிப்புகளை தவிர்க்கலாம். அவ்வப்போது மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு, தேவைப்பட்டால் சிகிச்சை பெற வேண்டியதும் அவசியம். ரெட்மீட், வெண்ணெய் ஆகியவற்றில் தீமை பயக்கும் கொழுப்புசத்து அதிகம் என்பதால் இதனை தவிர்ப்பது நல்லது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...