May 1, 2013

நாவிற்கு சுவையூட்டும் அருநெல்லிக்காய்

சிறுநெல்லி சிறுநெல்லி எனப்படும் அருநெல்லிக்காய் நாவிற்கு ருசியை உண்டாக்குவதில் பெரும்பங்கு வகிக்கிறது.
பிலன்தஸ் டிஸ்டிகஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட யுபோர்பியேசியே குடும்பத்தைச் சார்ந்த அருநெல்லி நாவிற்கு ருசியை தருவது மட்டுமின்றி அரோசகம் எனப்படும் ருசியின்மைக்கு காரணமான இரத்த சீர்கேட்டை நீக்கி மீண்டும் உணவின் மேல் வெறுப்பு ஏற்படாமல் காக்கிறது.
அருநெல்லிக்காயில் அசிடிக் அமிலம் மற்றும் லூப்பியால் என்னும் வேதிப்பொருள் நாவின் சுவை அரும்புகளை தூண்டி, தளர்ந்த சுவை நரம்புகளை பலப்படுத்துகின்றன.
அரு நெல்லிக்காயை அலசி, இடித்து, கொட்டை மற்றும் காம்பு நீக்கி நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
வெந்தயம், மிளகாய்வற்றல் மற்றும் பெருங்காயத்தை நன்கு வறுத்து, பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு சட்டியில் நல்லெண்ணெயை ஊற்றி, அதில் கடுகை போட்டு வெடித்தவுடன் அருநெல்லிக்காயை நன்கு வதக்க வேண்டும்.
பின்பு பொடித்து வைத்த மிளகாயத்தூள், வெந்தயப்பொடி, பெருங்காயப்பொடி ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக கலந்து, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி எடுத்து சூடாறியதும் கண்ணாடி பாட்டிலில் அடைத்து பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.
நாவில் எச்சில் ஊறவைக்கும் சுவையுடைய இந்த அருநெல்லி ஊறுகாயை உணவுக்கு தொட்டுக் கொள்ள பயன்படுத்தலாம்.
கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் மசக்கையினால் ஏற்படும் வாந்தி, குமட்டமல் நீங்க அரைநெல்லிக்காயுடன் உப்பு சேர்த்து உட்கொள்ளலாம்.

கண் குறைப்பாட்டை நீக்க உதவும் சீப்ரா மீன்கள்


சீப்ரா மீன் எனப்படும் ஒரு வகை மீனின் உயிர் மரபணுக்கள் மனிதன் கண் விழித்திரையில் ஏற்படும் குறைபாடுகளை நீக்கும் சக்தி படைத்தவை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதாவது இந்த மீனில் இருந்து பெறப்படும் Stem cells எனப்படும் மரபணுக்கள் Retinas என அழைக்கப்படும் விழித்திரையில் பழுது படும் ஒளிக் கூம்புகளை (Cones) மறுபடி உற்பத்தி செய்வதன் மூலம் இழந்த பார்வைத் திறனை மீள வழங்கும் ஆற்றலுடையன எனக் கூறப்படுகின்றது.
நமது விழித்திரையில் காணப்படும் தண்டுகள் (Rods) மற்றும் ஒளிக் கூம்புகள் (Cones) என்பவையே படங்களைக் கிரகிக்கும் ஆற்றலுடைய Photoreceptors ஆகும்.
மனிதனின் கண்களில் Rods இரவில் பார்வைத் திறனையும், cones பகல் நேரத்தில் அனைத்து நிறங்களையும் உணரச் செய்யும் தன்மையையும் அளிக்கின்றன.
இது குறித்து அல்பேர்ட்டா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளரான டெட் அல்லிசன் கூறுகையில், நமது விழித்திரையில் உள்ள ஒளிக் கூம்புகளை (Cones) மட்டுமே Zebra மீனின் மரபணுக்கள் திரும்ப வழங்கக் கூடியன.
இதுவரை கிடைக்கபெற்ற மருந்துகள் யாவும் தண்டுகளை (Rods) மட்டுமே குணப்படுத்தும் தன்மையுடையன எனவும் தெரிவித்தார்.
மனிதனின் கண்ணுக்கு மிகவும் உபயோகமான ஒரு மருந்து முதல் தடவையாக ஒரு விலங்கிலிருந்து பெறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் இதன் அடுத்த கட்டமாக இந்த சீப்ரா மீனில் பழுதான ஒளிக்கூம்புகளைத் திருத்தும் குறிப்பிட்ட ஜீனை (Gene) அடையாளம் காண்பதே எனவும் அவர் தெரிவித்தார்.

டெல்லி, பஞ்சாப், காஷ்மீர் வட மாநிலங்களில் நில நடுக்கம் : மக்கள் அச்சம்

இமாச்சலப்பிரதேசம் உள் ளிட்ட வட மாநிலங்களில் இன்று பகல் 12.30 மணிக்கு நில நடுக்கம் ஏற்பட்டது.

அப்போது கட்டிடங்கள் லேசாக குலுங்கியது. இதனால் மக்கள் அச்சம் அடைந்தனர்.

நில நடுக்கம் 10 வினாடி முதல் 15 வினாடிகள் வரை நீடித்தது. பாகிஸ்தானிலும் வாகா எல்லைப் பகுதியிலும் நில நடுக்கம் உணரப்பட்டது.

நில அதிர்வின் தன்மை ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவாகி இருந்தது. சேதம் ஏற்பட்டது பற்றி தகவல் இடெல்லி, பஞ்சாப், காஷ்மீர் வட மாநிலங்களில் நில நடுக்கம் : மக்கள் அச்சம்

மே தினம் உருவான வரலாறு..


...

அமெரிக்காவில் 1832 இல் பொஸ்டனில் கப்பலில் பணியாற்றிய தச்சுத் தொழிலாளர்கள் 10 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தம் செய்தனர். அதே போல் 1835இல் பிலடெல்பியாவிலும் பென்சில்வேனியாவிலும் இதே கோரிக்கையை முன் வைத்து இயக்கம் நடத்தப்பட்டது. பென்சில்வேனியாவில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களும் இரயில்வே தொழிலாளர்களும் குறைவான வேலை நேரத்தை வலியுறுத்தி 1877 இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து “அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு” என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது. இவ்வியக்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து இயக்கங்களை நடத்தியது. அத்தோடு மே 1, 1886 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. இவ்வியக்கமே மே தினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது.

தொழில் நகரங்களான நியூயார்க், சிகாகோ, பிலடெல்பியா, மில்விக்கி, சின்சினாட்டி,

சாம்சங் நிறுவனத்தின் மிகச்சிறந்த புதிய ஆண்ட்ராய்ட் போன்கள்

The Best New Samsung Android Phones

வணக்கம் நண்பர்களே..! மொபைல் உலகில் முடிசூடா மன்னனாக திகழும் சாம்சங் நிறுவனத்தின் மிகச்சிறந்த புதிய ஆண்ட்ராய்ட் போன்கள் கீழே வரிசைப்படுத்தபட்டுள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித்ததில், விலையில், தரத்தில் சிறப்பு பெற்றவை. சாம்சங் நிறுவனத்தின் போன்களின் பெயர்கள், அந்த போன்களின் படங்கள், அவற்றில் உள்ள மிக முக்கியமான உள்ளடக்க உறுப்புகள் ஆகியவற்றை குறிப்பிட்டுள்ளேன்.

Samsung Galaxy Mega 6.3 Android mobile Phone


  • 6.5 inch hd touch screen (6 இஞ்ச் ஹெச்.டி தொடுதிரை)
  • 1.7 GHz Processor (1.7 GHz பிராசசர்)
  • 1.5 GB Ram (1.5 GB Ram)
  • 8/16 GB Internal Memory (8/16 உள் நினைவகம்)
  • 8MP Camera (8 எம்பி கேமரா)
  • Android 4.2.2 OS (புதிய ஆண்ட்ராய்ட் 4.2.2 இயங்குதளம்)
  • Bluetooth, WiFi (ப்ளூ டூத், வைபை)

Samsung Galaxy Mega 5.6 Android mobile Phone


Samsung Galaxy Mega 5.6 android mobile
  • 5.8 inch HD touch screen (6 இஞ்ச் ஹெச்.டி தொடுதிரை)
  • 1.4 GHz Processor (1.7 GHz பிராசசர்)
  • 1.5 GB Ram (1.5 GB Ram)
  • 8/16 GB Internal Memory (8/16 உள் நினைவகம்)
  • 8 Mega Pixel Camera (8 எம்பி கேமரா)
  • Android 4.2.2 OS (புதிய ஆண்ட்ராய்ட் 4.2.2 இயங்குதளம்)
  • Bluetooth, WiFi (ப்ளூ டூத், வைபை)

Samsung Galaxy Fame S6810 Android mobile Phone

கூகிள் ட்ரான்லிட்ரேசனைப் பயன்படுத்தி தமிழில் எழுத

How to type in Gamil
வணக்கம் நண்பர்களே..!

நம்மில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் ஜிமெயிலில் தமிழ் தட்டச்சு தெரியாமலேயே தமிழில் எழுதி மின்னஞ்சல் அனுப்ப முடியும். 

தமிழை தட்டச்சிட்ட உங்கள் ஜிமெயில் செட்டிங்சில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும். அது என்னென்ன மாற்றங்கள் என்பதைப் பார்ப்போம். 

how to type tamil in gamil
முதலில் உங்களுடைய ஜிமெயில் அக்கவுண்டஃடைத் திறந்துகொள்ளுங்கள். வலது மேல் மூளையில் பற்சக்கரம் போன்ற படத்தை கிளிக் செய்யவும். இது செட்டிங்ஸ் ஐகான் எனப்படும்.

  • அதில் செட்டிங்ஸ் (Settings) என்பதைத் தேர்ந்தெடுக்கவும். 
  • தோன்றும் விண்டோவில் Language என்பதில் நேராக உள்ள Show all language options என்பதைக் கிளிக் செய்யவும். 
  • இப்போது தோன்றும் விண்டோவில் Enable input tools என்பதில் 'டிக்' மார்க்கை ஏற்படுத்தவும். 
  • இப்பொழுது INPUT TOOLS என்ற விண்டோ தோன்றும். 
  • அதில் தமிழ் போனடிக் என்பதை டபுள் கிளிக் செய்வதன் மூலம் தமிழ் போனடிக் அமைப்புத் தேர்ந்தெடுக்கப்படும். இறுதியில் ஓ.கே கொடுத்துவிட்டு, செய்த மாற்றங்களை கீழே உள்ள Save Settings என்பதை அழுத்தவும். இப்பொழுது மாற்றங்கள் சேமிக்கப்பட்டுவிடும். 
இனி நீங்கள் உங்களுடைய Gmail-ன் முகப்புப் பக்கத்தில் மேல் வலது மூலையில் செட்டிங்ஸ் ஐகானிற்கு பக்கத்தில் இவ்வாறு கூகிள் லாங்குவேஜ் இன்புட் டூல் -ஐ காணலாம். 

அதைப் பயன்படுத்தி நீங்கள் எளிதாக தமிழில் தட்டச்சிட முடியும்.

Apr 30, 2013

இன்று 127வது சர்வதேச தொழிலாளர் தினம்

இன்று 127வது சர்வதேச தொழிலாளர் தினம்!

!


May 1, 2013

உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்திற்காக குரல் எழுப்பும் 127வது சர்வதேச மே தினம் அல்லது சர்வதேச தொழிலாளர் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

மே தினம் எனப்படும் உலகத் தொழிலாளர் தினம் ஆண்டுதோறும் மே முதலாம் திகதி (மே 1) உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுவதாகும்.

18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் - 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

இதற்கெதிரான குரல்களும் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் துவங்கியது. இதில் குறிப்பிடத்தக்கது இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம் (chartists). சாசன இயக்கம் 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது. அதில் குறிப்பிடத்தக்கது 10 மணி நேர வேலை கோரிக்கை.

1830களில் பிரான்சில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் தினமும் கட்டாயமாக 15 மணி நேரம் உழைக்க வேண்டி இருந்தனர். இதை எதிர்த்து அவர்கள் பெரும்

கேள்விப்படாத கூகுள் சேவை சாதனங்கள்



Posted: 30 Apr 2013
எந்தக் கேள்விக்கும், சந்தேகத்திற்கும் இடம் அளிக்காத வகையில், கூகுள் டாட் காம் இணைய தளம், தேடலுக்கான சிறந்த தளமாக இன்று இடம் பிடித்துள்ளது. 

கூகுள் தளத்துடன், நாம் ஜிமெயில், யுட்யூப் மற்றும் கூகுள் மேப்ஸ் என மேலும் சில கூகுள் தரும் வசதிகளை அறிந்து வைத்துப் பயன்படுத்தி வருகிறோம். இன்னும் சில வசதிகளையும் சிலர் தெரிந்து தங்கள் வழக்கமான பணியில் இணைத்திருக்கலாம். 

கூகுள் தரும் ஆண்ட்ராய்ட் சிஸ்டம் கூட ஸ்மார்ட் போன் பயனாளர்களுக்கு ஆச்சரியமானதாகத்தான் உள்ளது. இருப்பினும், கூகுள் இன்னும் பல சேவைகளை நமக்கு வழங்கி வருவது பலருக்குத் தெரியவில்லை. இவை எல்லாமே, இணையத்தில் இருக்கின்றன. நம் வாழ்வை இன்னும் சிறப்பாகவும், சுவைபடத்தக்கதாகவும் மாற்றி வருகின்றன. இவற்றை இங்கு பட்டியலிட்டுப் பார்க்கலாம். 


1. கூகுள் ட்ரான்ஸ்லிட்டரேட் (Google transliterate) இது ஒரு இலவச மொழி பெயர்க்கும்

டச்சு அரசராக அலெக்சாண்டர் பொறுப்பேற்பு

ஆம்ஸ்டர்டாம் : நெதர்லாந்து நாட்டின் மன்னராக, வில்லெம் அலெக்சாண்டர் நேற்று முடி சூட்டிக்கொண்டார். நெதர்லாந்து நாட்டின் அரசியாக பீட்ரிக்ஸ், 33 ஆண்டுகளாக அரியணையில் இருந்தார். தற்போது 75 வயதாகும், பீட்ரிக்ஸ், உடல் நிலையை காரணம் காட்டி, தனது மகனுக்கு முடி சூட்டுவதாக அறிவித்தார்.

இதையடுத்து, 46 வயதான வில்லெம் அலெக்சாண்டர், ஆம்ஸ்டர்டாம் நகரில், அரசராக நேற்று முடி சூட்டப்பட்டார். இதற்கான ஒப்பந்தத்தில், அரசி பீட்ரிக்ஸ் கையெழுத்திட்டார். நெதர்லாந்தில், 1890ம் ஆண்டுக்கு பிறகு, தற்போது தான், மன்னர் பொறுப்பேற்கிறார்.






















உயர் இரத்த அழுத்தத்திற்கான 10 வகையான இயற்கை தீர்வுகள்!!! - 10 herbal remedies high bp - Boldsky Tamil








அல்கேன் 7வது சுற்றில், விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி



அல்கேன் நினைவு செஸ் தொடரின் ஏழாவது சுற்றில், “உலக சாம்பியன்’ இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி பெற்றார்.

பிரான்ஸ் மற்றும் ரஷ்யாவில் அல்கேன் செஸ் தொடர் நடக்கிறது. இதில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், ரஷ்யாவின் விளாடிமிர் கிராம்னிக், அர்மேனியாவின் லெவான் ஆரோனியன், இங்கிலாந்தின் மைக்கேல் ஆடம்ஸ், பிரான்சின் லாரன்ட் பிரசினட் உள்ளிட்ட 10 வீரர்கள் பங்கேற்கின்றனர்.

இதன் ஏழாவது சுற்றில் இந்தியாவின் ஆனந்த், பிரான்சின் லாரன்ட் பிரசினட்டை சந்தித்தார். இந்த சுற்றில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய ஆனந்த், 49வது நகர்த்தலின்போது வெற்றி பெற்றார்.

இஸ்ரேலின் போரிஸ், சீனாவின் லிரன் டிங்கை வீழ்த்தினார். ஏழு சுற்றுகள் முடிந்த நிலையில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் (4 புள்ளி) 4வது இடத்தில் உள்ளார். இஸ்ரேலின் போரிஸ் (4.5), பிரான்சின் மேக்ஸ்மீ (4), இங்கிலாந்தின் மைக்கேல் ஆடம்ஸ் (4) ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர். மீதமுள்ள இரண்டு சுற்று போட்டிகளிலும் ஆனந்த் வெற்றி பெறும் பட்சத்தில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றலாம்.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...