May 1, 2013

கூகிள் ட்ரான்லிட்ரேசனைப் பயன்படுத்தி தமிழில் எழுத

How to type in Gamil
வணக்கம் நண்பர்களே..!

நம்மில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் ஜிமெயிலில் தமிழ் தட்டச்சு தெரியாமலேயே தமிழில் எழுதி மின்னஞ்சல் அனுப்ப முடியும். 

தமிழை தட்டச்சிட்ட உங்கள் ஜிமெயில் செட்டிங்சில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும். அது என்னென்ன மாற்றங்கள் என்பதைப் பார்ப்போம். 

how to type tamil in gamil
முதலில் உங்களுடைய ஜிமெயில் அக்கவுண்டஃடைத் திறந்துகொள்ளுங்கள். வலது மேல் மூளையில் பற்சக்கரம் போன்ற படத்தை கிளிக் செய்யவும். இது செட்டிங்ஸ் ஐகான் எனப்படும்.

  • அதில் செட்டிங்ஸ் (Settings) என்பதைத் தேர்ந்தெடுக்கவும். 
  • தோன்றும் விண்டோவில் Language என்பதில் நேராக உள்ள Show all language options என்பதைக் கிளிக் செய்யவும். 
  • இப்போது தோன்றும் விண்டோவில் Enable input tools என்பதில் 'டிக்' மார்க்கை ஏற்படுத்தவும். 
  • இப்பொழுது INPUT TOOLS என்ற விண்டோ தோன்றும். 
  • அதில் தமிழ் போனடிக் என்பதை டபுள் கிளிக் செய்வதன் மூலம் தமிழ் போனடிக் அமைப்புத் தேர்ந்தெடுக்கப்படும். இறுதியில் ஓ.கே கொடுத்துவிட்டு, செய்த மாற்றங்களை கீழே உள்ள Save Settings என்பதை அழுத்தவும். இப்பொழுது மாற்றங்கள் சேமிக்கப்பட்டுவிடும். 
இனி நீங்கள் உங்களுடைய Gmail-ன் முகப்புப் பக்கத்தில் மேல் வலது மூலையில் செட்டிங்ஸ் ஐகானிற்கு பக்கத்தில் இவ்வாறு கூகிள் லாங்குவேஜ் இன்புட் டூல் -ஐ காணலாம். 

அதைப் பயன்படுத்தி நீங்கள் எளிதாக தமிழில் தட்டச்சிட முடியும்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...