Mar 12, 2014

பிங் பயன்படுத்தினால் 100 ஜிபி இலவச இடம்




க்ளவ்ட் ஸ்டோரேஜ் இப்போது பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு பயன்படுத்து பவர்களைத் தன் பக்கம் இழுக்க, மைக்ரோசாப்ட் ஒரு பரிசுத் திட்டத்தினை அறிவித்துள்ளது. 

அதன் தேடல் சாதனமான பிங் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு, தன் க்ளவ்ட் ஸ்டோரேஜ் ட்ரைவ் ஒன் ட்ரைவில், 100 ஜிபி இலவச இடம் தருவதாகக் கூறியுள்ளது.


நீங்கள் பிங் மட்டும் பயன்படுத்தினாலும், அல்லது கூகுள் மற்றும் பிங் தேடல் தளங்களை, மாற்றி மாற்றி பயன்படுத்தினாலும், இந்த திட்டத்தில் கலந்து கொள்ளலாம். 

ஒவ்வொரு முறை நீங்கள் பிங் தளம் செல்லும்போதும், மைக்ரோசாப்ட் அதனைப் பதிவு செய்து கொள்கிறது. 

ஒவ்வொரு முறை செல்வதற்கும் அதற்கான கிரெடிட்களைத் ("credits”) தருகிறது. 

இவ்வாறு 100 கிரெடிட்கள் ஒருவரின் கணக்கில் சேர்ந்த பின்னர், அதனைப் பயன்படுத்தி அவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் க்ளவ்ட் ஸ்டோரேஜ் தளமான ஒன் ட்ரைவில், 100 ஜிபி இடம் ஓர் ஆண்டு பயன்பாட்டிற்கெனப் பரிசாகப் பெறலாம். 

இத்துடன், தங்கள் நண்பர்களை பிங் சேவையைப் பயன்படுத்திக் கொள்ள அழைப்பவர்களுக்கும் இந்த கிரெடிட் தரப்படும். 

இதே போல பிங் ரிவார்ட்ஸ் திட்டத்திற்கு நண்பர்களை அழைத்தாலும் கிரெடிட் உண்டு. 

மைக்ரோசாப்ட் ஒன் ட்ரைவில் புதியதாக அக்கவுண்ட் தொடங்கும் அனைவருக்கும் 7 ஜிபி இலவச இடம் தந்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

அவுட்டர்நெTட் தரும் இலவச இண்டர்நெட்


நாம் என்றாவது யோசித்திருப்போமா? இன்டர்நெட் ஒன்று இருப்பது போல அவுட்டர்நெட் ஒன்று உண்டா என்று? இல்லை. வேடிக்கைக்குக் கூட இது போல ஒருவர் சொல்லிக் கேட்டதில்லை. 
ஆனால், நியூயார்க் நகரில் இயங்கும் Media Development Investment Fund (MDIF) என்னும் அமைப்பினைச் சேர்ந்த சிலர் இணைந்து "Outernet” என்ற ஒன்றை அமைப்பதில் ஈடுபட்டுள்ளனர். 

இது சிறிய சாட்டலைட்களின் இணைப்பாக உலகெங்கும் அமைக்கப்படும். இதன் பணி? இன்டர்நெட் வழி கிடைக்கும் டேட்டாவினை இலவசமாக, இந்த உலகில் உள்ள ஒவ்வொருவரும் பெறும் வகையில் தருவதே இந்த கட்டமைப்பின் பணியாக இருக்கும். 

எந்த இடம் என்றில்லாமல், உலகில் வாழும் அனைவருக்கும், எந்தவித தடையும் இன்றி, வடிகட்டல் இன்றி, அனைத்து இணைய டேட்டாவும் கிடைக்கச் செய்வதே இதன் நோக்கமாகும்.

தொலை தொடர்பு நிறுவனமாக முதல் இடத்தில் பேஸ்புக்





வாட்ஸ் அப் செயலியைத் தனதாக்கிக் கொண்டதன் மூலம், அதிக எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களைக் கொண்ட உலகின் முதல் தொலைதொடர்பு நிறுவனமாக, பேஸ்புக் இடம் பெறுகிறது. 

இந்த வகையில், மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் நிறுவனங்களைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது. 

தற்போது மெசேஜ் மற்றும் போட்டோ பகிர்ந்து கொள்ள வாட்ஸ் அப் செயலியில் வசதி உள்ளது. இனி, வாய்ஸ் பகிர்வும் இதில் தரப்படும் என பேஸ்புக் அறிவித்துள்ளது. 

வாட்ஸ் அப் செயலியிடம், உலக அளவில், 50 கோடி போன் எண்கள் உள்ளன. அத்துடன் இவை, இணையத்தில் எந்த இடத்தில் உள்ளன என்ற தகவலையும் வாட்ஸ் அப் வைத்துள்ளது. 

இந்த அளவிற்கு வழக்கமான தொலைபேசிகள் தொலைபேசி நிறுவனங்களிடம் இருந்தாலும், வாட்ஸ் அப் இந்த தொலைபேசி பயன்பாட்டிற்கு எந்த நிறுவுதல் கட்டணமோ, செயல்படுத்துவதற்கான கட்டணமோ வாங்குவதில்லை என்பது இதன் சிறப்பு.

Mar 10, 2014

இயற்கையின் வரப்பிரசாதம் வேப்பம் பூ!

 


தெய்வம் சார்ந்த பராரை வேம்பு என்று சங்க இலக்கியத்தில் வேப்பமரத்தைப் பற்றி பெருமையாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழர்களின் பண்பாட்டோடும், பழக்க வழக்கங்களோடும் பிணைந்துள்ள வேம்பின் அனைத்து பாகங்களும் பயனுடையவை என்று சித்தர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனாலேயே ‘கிராமத்தின் மருந்தகம்” என்று வேப்பமரம் சிறப்பிக்கப்படுகிறது.
இயற்கையின் வரப்பிரசாதமான இம்மரத்தின் வேர், பட்டை, உட்பாகம், பிசின், இலை, பூ, காய், பழம், ஈர்க்கு, விதை, எண்ணெய் என அனைத்து பகுதிகளும் பயன் தர வல்லவை.
அவ்வகையில் வேப்பம் பூவின் மருத்துவ பயன்களை சிறிது காண்போம்!
வாயுத்தொல்லை,​ ஏப்பம் அதிகமாக வருதல், பசியின்மை போன்றவைகளுக்கு வேப்ப மரத்தின் பூக்களை மென்று தின்பார்கள்.
5 கிராம் உலர்ந்த பழைய வேம்புப் பூவை 50 மி.லி. குடிநீர் விட்டு மூடி வைத்திருந்து வடிகட்டிச் சாப்பிட்டு வரப் பசியின்மை, உடல் தளர்ச்சி நீங்கும்.
3 கிராம் வேப்பம் விதையை சிறிது வெல்லம் கூட்டி அரைத்துக் காலை, மாலையாக 40 நாட்கள் சாப்பிட மூல நோய் தீரும்.
நீண்ட நாள் சாப்பிட்டு வரத் தோல் நோய்கள், சூதக சன்னி, நரம்பு இசிவு, குடல் புழுக்கள் போன்ற தொந்தரவு நீங்கும்.
வேப்பம் பூவில் துவையல், ரசம் குமட்டல், வாந்தி மயக்கம் குணமாகும். பசி உண்டாகும். பூவை ஊற வைத்துக் குடிக்க உடல் பித்தம் தீரும்.
காயை உலர்த்திய பொடி வெந்நீரில் கொடுக்க மலேரியாக் காச்சல், மண்டையிடி குணமாகும்.
வேப்பம்பழ சர்பத் கொடுத்து வர சொறி, சிரங்கு போன்றவை குணமாகும். கிருமிகள் அனைத்தையும் அழித்து விடும் ஆற்றல் கொண்டதாகும்.
வேப்பம்கொட்டையை உடைத்து உள்ளிருக்கும் பருப்பை எடுத்து அரைத்துப் புரையோடிய புண்கள் மீது பூசி வரக் குணம் கிடைக்கும். குஷ்ட நோயாளிகளின் புண்களையும் குணப்படுத்தும்.
நரம்புகளாலுண்டாகும் இழப்பு, சீதளம் இவைகளைப் போக்க உந்தாமணி இலையை வேப்பெண்ணெயில் வதக்கிச் சூட்டுடன் ஒத்தடம் கொடுத்து வேப்பெண்ணெயை வலி மற்றும் ரணங்களுக்குத் தடவி வரக் குணம் கிடைக்கும்.
வேப்பம்பட்டை நாவல்மரப்பட்டை வகைக்கு 150 கிராம் எடுத்து இதனுடன் 50 கிராம் மிளகு 50 கிராம் சீமைக்காசிக்கட்டி இவற்றை நன்றாக உலர்த்தி இடித்து வைத்துக் கொண்டு ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி தூளைப்போட்டுக் காய்ச்சி எடுத்த கசாயத்தைத் தினம் இரு வேளை கொடுத்து வந்தால் நாட்பட்ட பேதி, கிராணி, சீதபேதி குணமாகும்.

Mar 4, 2014

அசைக்க முடியாத உலக சக்தியாக கூகுள்



அமெரிக்காவில் தன் தலைமை இடத்தைக் கொண்டு, அனைத்து வள ரும் மற்றும் வளர்ந்த நாடுகளில் தன் கிளை அலுவலகங்களையும், ஆய்வு மையங்களையும் கொண்டுள்ள கூகுள் நிறுவனம், அளப்பரிய முதலீட்டினையும், அசைக்கமுடியாத டிஜிட்டல் கட்டமைப்பினையும் கொண்டதாகும். எந்த அரசும் அதனை எதிர்க்க முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது.

கூகுள் தன் தேடுதல் சாதனத்துடன் இணைய உலகில் நுழைந்த போது, இந்த தேடல் பிரிவில் AltaVista, Hotbot, or Lycos ஆகிய தளங்கள் கோலோச்சி இருந்தன. 

ஆனால், இன்று கூகுள் முன்னால், இவை அனைத்தும் தங்கள் வாடிக்கையாளர்களை இழந்துள்ளன. இணையத் தேடலில் மிகத் துல்லியமான முடிவுகளையே கொண்டு வர வேண்டும் என்பதையே தன் இலக்காக, கூகுள் நிர்ணயித்துக் கொண்டு, அதில் வெற்றியும் பெற்றுள்ளது. 

யாஹூ தவிர, இந்தப் பிரிவில் செயல்பட்டு வந்த அனைத்து தேடல் சாதன நிறுவனங்களும்,

பேஸ்புக் தந்த பிறந்த நாள் பரிசு




தன் பத்தாவது பிறந்த நாளைக் கொண்டாடிய பேஸ்புக் நிறுவனம், தன் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் பரிசினைத் தந்து அவர்களை மகிழ்ச்சியில் நனைத்தது. 

ஒவ்வொருவரும் தங்கள் பேஸ்புக் பக்கங்களில் பதிந்து வைத்த போட்டோக்களுடன், அவர்களின் பிரபலமான பதிவுகளையும் இணைத்து ஒரு சிறிய வீடியோ படமாக அமைத்து வழங்கியது. 

இந்த பரிசினை பேஸ்புக் வாடிக்கையாளர்கள் அனைவரும், தங்கள் பக்கங் களில் பதிவு செய்து மகிழ்ந்தனர். இது என் படம். உங்களுடையது இங்கு உள்ளது என அதற்கான லிங்க் தரப்பட்டது. 

ஒவ்வொருவரும் பேஸ்புக்கில் லாக் இன் செய்த பின்னர் https://www.facebook.com/ lookback/ என்ற முகவரியில் உள்ள பக்கத்திற்குச் சென்றால், அவர்களுக்கான வீடியோ கிளிப் கிடைக்கும்.

திரு சண்முகரத்தினம் நாகலிங்கம் (சண்)

திரு சண்முகரத்தினம் நாகலிங்கம்
(சண்)
மலர்வு : 3 மார்ச் 1943 — உதிர்வு : 2 மார்ச் 2014

யாழ். கட்டுவன் தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகரத்தினம் நாகலிங்கம் அவர்கள் 02-03-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், நாகம்மா(கட்டுவன், தெல்லிப்பளை) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், தங்கம்மா(கட்டுவன், தெல்லிப்பளை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி(கட்டுவன், டென்மார்க்) அவர்களின் பாசமிகு துணைவரும்,
தனேந்திரன்(டென்மார்க்), தமயந்தி(ஜெர்மனி), தனேஸ்வரி(டென்மார்க்), தனச்செல்வி(இங்கிலாந்து), தமிழரசி(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சீவரத்தினம்(பிரான்ஸ்), காலஞ்சென்ற விக்கினேஸ்வரி(இலங்கை), அப்பையா(இங்கிலாந்து), தவமணி(இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சிவஞானம்(பிரான்ஸ்), சபாரட்ணம்(இலங்கை), சித்திராதேவி(இங்கிலாந்து), காலஞ்சென்ற குணரத்தினம்(இலங்கை) ஆகியோரின் மைத்துனரும்,
நளாயினி(டென்மார்க்), சொர்ணலிங்கம்(ஜெர்மனி), சோதிசிவம்(டென்மார்க்), கருணாகரன்(இங்கிலாந்து), மகேந்திரன்(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
தனுஜன், தனெக்சன், காலஞ்சென்ற தர்வின், நந்தியா(டென்மார்க்), செந்தூரன், மயூரன்(ஜெர்மனி), மிதுசன், விதுரன்(டென்மார்க்), கீர்த்தனா, கீர்த்தன், கீர்த்திகா(இங்கிலாந்து), மதீபன், கார்த்தீபன், கஜீபன்(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்

Lankasri Notice!

Lankasri Notice!

Mar 3, 2014

டாக்டரிடம் எதற்காக போய் நின்றாலும், 'சாப்பாட்டுல நிறைய கீரையைச் சேர்த்துக்கோங்க...' என்ற அட்வைஸே முதல் வந்து விழுவதால்... உடம்புக்கு குளிர்ச் சியையும், சத்துக்களையும் சகட்டு மேனிக்கு அள்ளித் தரும் கீரைகளைப் பற்றி நம்மவர்களுக்கு சந்தேகமே இல்லை. ஆனால், அந்தக் கீரையை எப்படி எப்படியெல்லாம் ஈஸியாகவும், டேஸ்ட்டாகவும் சமைத்துச் சாப்பிடலாம் என்பதில்தான் குழப்பமே! உங்களுக்கு உதவுவதற்காகவே... மசியல் தொடங்கி கொழுக்கட்டை வரை கீரையில் விதம் விதமாகச் சமைத்து அசத்தியிருக்கிறார் 'சமையல்கலை நிபுணர்’ வசந்தா விஜயராகவன்.

பார்த்த மாத்திரத்திலேயே எடுத்துச் சாப்பிட வைக்கும் அளவுக்கு, தன்னுடைய கை வண்ணத்தால் அவற்றை அலங்கரித்திருக்கிறார் சென்னை பள்ளிக்கரணையில் 'ஸ்டார் கார்விங்’ என்ற நிறுவனத்தை நடத்தி வரும் செஃப் ரஜினி.

கீரை டிப்ஸ்...

கீரையுடன் சிறிது எண்ணெய் விட்டு வேக வைத்தால், பசுமை மாறாமல்

உக்ரைனில் ரஷ்ய கப்பல்கள்! போர் மூளும் அபாயம் (வீடியோ இணைப்பு)

உக்ரைனுக்கு இரண்டு போர்க் கப்பல்களை ரஷ்யா அனுப்பி உள்ளதால் அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது.
உக்ரைனில் ஜனாதிபதியாக பதவி வகித்த விக்டர் யானுகோவிச்சுக்கு எதிராக கடந்த மூன்று மாதங்களாக போராட்டம் நடந்து வருகிறது.
போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாத விக்டர் தலைமறைவானார், இதனையடுத்து இடைக்கால ஜனாதிபதியாக ஒலேக்சாண்டர் துர்ஷிநோவ், பிரதமராக அர்செனி யாத்செனியுக் பொறுப்பு ஏற்றனர்.
இதன்பின் ரஷ்யாவின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள உக்ரைனின் கிரீமியா சுயாட்சி பிரதேசத்தில் போராட்டம் வலுவடைந்தது, ரஷ்ய ஆதரவாளர்கள் தலைநகரிலுள்ள அரசாங்க அலுவலகங்களை கைப்பற்ற, ரஷ்ய ராணுவமும் நுழைந்து 2 விமான நிலையங்களை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தன. இது மேலும் 2 நகரங்களுக்கு பரவி ரஷ்ய ஆதரவாளர்களுக்கும், இடைக்கால அரசு ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் நிகழ்ந்தது.
இந்த சூழ்நிலையில் உக்ரைனுக்கு கூடுதல் ராணுவத்தை அனுப்ப ரஷ்ய நாடாளுமன்றமும்
உலகை கலக்கிய புகைப்படங்கள்
THE FACE OF AN ICEBERG
OPEN WATER ROLL CLOUD
THE TALLEST WATERFALL IN THE WORLD
INVISIBLE REFLECTION
GRAND CANYON LIGHT SHOW
THE GORGE AT WATKINS GLEN
HONG KONG AT NIGHT

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...