Apr 22, 2012

ரோஜா

    பிறந்தகம் அந்நிய பூமியாக இருந்தாலும், நீண்ட காலத்திற்கு முன்பே நம் மண்ணைப் புகுந்த இடமாகக் கொண்டு அங்கிங்கெனாத படி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் மலர்களின் ராஜாவான ரோஜா மலரின் மருத்துவக் குணம் நாம் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும்.
    இதனை சம எடையாக சீனக் கற்கண்டுடன் தேன் சேர்த்து அன்றாடச் சூரிய வெயிலில் வைத்து எடுத்துக் கொண்டு காலை, மாலை இரு வேளையும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வரலாம். இதனால் உடலுக்கு உற்சாகத்தையும், மனதுக்கு உல்லாசத்தையும் சிறப்பாகத் தந்து மகிழ்விக்கும்.
    மலம் இறுகிய குழந்தைகட்கு இது சிறிது மலமிளக்கியாகவும் வேலை செய்கிறது.
    அன்பிற்குரியோருக்கு தந்தது ஆரத் தழுவ வைக்கும் இந்த ரோஜாவிலிருந்துதான் பன்னீர் தயாரித்து நம்மையும் நம்மைச் சுற்றியுள்ள பகுதிகளையும் மணக்க வைக்கிறது. பெண்களுக்கு ஏற்படும் கருப்பை தொடர்பான வியாதிகளுக்கு நன்கு வேலை செய்து அவர்களைப் புன்னகை பூக்க வைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது ரோஜா.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...