Apr 22, 2012

நெல்லிக்கனி


மருத்துவக் குணங்கள்:

    சித்த வைத்தியத்தில் கரும்பின் வேறு பெயர்களாக புனற்பூசம், இக்கு, வேய் என அழைக்கப்படுகிறது. மருத்துவப் பயன்பாட்டுக்கு கரும்புச்சாறு, சர்க்கரை, வேர் பயனாகிறது. இவை இனிப்பு சுவையுடையது. குளிர்ச்சித் தன்மை கொண்டது.
    இதன் சாற்றை அதிகமாக சாப்பிட்டால் சந்தேக நோயுண்டாகும். மிதமாக சாப்பிட்டால் வெள்ளை, அழற்சி பெருக்கு அடங்கும்.
    இதன் சாறு பித்தத்தைக் குறைக்கிறது.
    இது பித்தத்தைப் போக்கிடும். வயிற்றுப் புழுக்களையும், நீரிழிவையும் ஏற்படுத்தும்.
    கரும்பின் சாற்றைக் காயச்சி சர்க்கரை
செய்யப்படுகிறது. இது மருந்துகளுக்குத் தேவையாயுள்ளது. வாந்தி, பித்தம், சுவையற்ற தன்மையைப் போக்குகிறது. கெட்டியான சளியைக் கரைத்து சுகம் தருகிறது.
    இது வாத ஜுரம், வாத நோய், நுண்மையான புழு, விக்கல்களை நீக்குகிறது.
    சர்க்கரையைக் கொண்டு கற்கண்டு தயாரிக்கப்படுகிறது. இதில் சிறிதளவு எடுத்து சிறிதளவு பொரிகாரம் சேர்த்து 7 தினங்கள் சாப்பிட்டு வந்தால், விந்து நீர்த்தல் நீங்கும். மேலும் பல்லரணை, (ஈறு தடிப்பு) இருமல், வாந்தி ஆகியவை தீரும்.
 

நெல்லியை வலிமை நெல்லி, உணவு நெல்லி, அமிர்த நெல்லி என போற்றுகின்றனர். நெல்லி உயிராற்றலை வளர்க்கும் ஓர் ஒப்பற்ற உணவு. ஆரோக்கிய வாழ்விற்கு நெல்லிச்சாறு அருமையான நண்பன் எனலாம். இது உருண்டையாகவும், சிறிது பச்சை மஞ்சள் நிறத்திலும் இருக்கும். மழைக்காலங்களில் கிடைக்கும்.

    நெல்லியின் மருத்துவக் குணங்கள் போல் வேறு எந்த பழத்திலும் இல்லை எனலாம். காயகல்பம் தயாரிப்பு நெல்லியால் தான் உருவாகிறது. தாது விருத்தி மற்றும் தலை முடி டானிக்காக பயன்படுகிறது. வைட்டமின் C அதிக அளவில் உள்ளது. கண்களை அதன் இமை போல் நெல்லிச்சாறு பாதுகாக்கிறது.
    நெல்லியை காய வைத்து அதன் மூலம் வருடம் முழுவதும் சாறு எடுத்து சாப்பிட்டு உயரிய ஆரோக்கியம் பெறலாம். ஒரு லிட்டர் நீரில் ஒரு ஸ்பூன் நெல்லிச்சாறு கலந்து உடனடியாக சுத்தமான குடிநீர் தயாரிக



நெல்லிக்கனியில் உள்ள சத்துக்கள்:

    நீர்=82%
    புரதம்=0.5%
    கொழுப்பு=0.1%
    மாவுப்பொருள்=14%
    நார்ச்சத்து=3.5%
    கால்சியம்=50 யூனிட்
    பாஸ்பரஸ்=20 யூனிட்
    இரும்பு=1.2 யூனிட்
    வைட்டமின் C=600 யூனிட்

இவை அனைத்தும் 100 கிராம் நெல்லிச்சாறில் உள்ள சத்துகள்.

மருத்துவக் குணங்கள்:

    பல் நோய், அஜீரணம், மூட்டு வலி குறையும். அருமையான கண் பார்வை தரும்.
    நீண்ட ஆயுளுக்கு நாளும் நெல்லிச்சாறு அருந்த வேண்டும்.
    பசியின்மை விலகி உண்மை பசியை உணர வைக்கும்.
    மாதவிடாய், மலச்சிக்கல், மூலம் சரியாகும். பெண்களின் கர்ப்பப்பை கோளாறு, நீரிழிவு, இரத்த அழுத்தம், நரம்புத் தளர்ச்சி விலகுகிறது.

குறிப்பு:

    நெல்லியை காய வைத்தாலும் வைட்டமின்  C குறைவதில்லை. மாறாக நிழலில் காய வைக்கும் போது அதிகரிக்கிறது

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...