Aug 13, 2012

ஈரான் நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 306 ஆக உயர்வு




டெஹ்ரான், ஆக. 14: ஈரான் நிலநடுக்கத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை 306 ஆக அதிகரித்துள்ளது. ஈரானில் சனிக்கிழமை இரவு அடுத்தடுத்து 2 முறை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் 6 கிராமங்கள் முற்றிலும் அழிந்தன. கட்டிட இடிபாடுகளில் சிக்கி நேற்று வரை 306 பேர் இறந்துள்ளனர். மேலும், 3037 பேர் காயமடைந்துள்ளனர் என்று அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் மர்ஸி வாஹித் டஸ்ஜர்டி தெரிவித்தார்.

இறந்த 306 பேரில் 219 பேர் பெண்கள், குழந்தைகள். 49 பேர் ஆண்கள். அதிகாரிகள் வருவதற்கு முன்பே பலரின் சடலங்கள் புதைக்கப்பட்டு விட்டன. இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கையை கணக்கிடுவதில் குறைபாடு ஏற்பட்டது. காயமடைந்தவர்களில் 2011 பேர் முதலுதவி பெற்று சென்றனர். எஞ்சியவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 700க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் நடைபெற்றுள்ளன. தொடர்ந்து சடலங்களைத் தேடும் பணி நடைபெறுகிறது என்றும் டஸ்ஜர்டி  கூறினார்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...