Aug 13, 2012

நான் வேம்பு பேசுகிறேன்..! மருத்துவம் படிக்காத மங்கம்மா பாட்டியின் பழுத்த அனுபவம்..



சிறு வயதில், வேப்பங்கொழுந்து இலைகளோடு சீரகம், உப்பு சேர்த்து அரைத்து, சீடை போல் உருட்டிக் கொடுக்க வரும்போது, அம்மாவின் பிடியில் சிக்காமல் ஓடி, சிக்கிக் கொண்ட அந்த நாட்கள்...
காய வைத்த வேப்பம் பூக்களின் அருமை தெரியாமல், ஊதிப் பறக்கவிட்டு விளையாடியது...
'தினமும் வேப்பிலைக் கொழுந்தை ஒரு கிள்ளு கிள்ளி, வெறுமனே மென்னு விழுங்கறதால எனக்கு தலைவலி, ஜுரமே வந்ததில்ல’ என்று பெருமையாகச் சொல்லிக் கொள்ளும் மாமாவின் ஆரோக்கியமான தேகம்...
கரும்புத் தோட்டத்தின் பம்ப்செட் தொட்டி மேல் அமர்ந்து, வேப்பங் குச்சி நுனியை பிரஷ் போல் தட்டி, பல் துலக்குபவர்களின் லாகவம்...
'வாயு, பசியின்மை, குமட்டல், வாந்தி, மயக்கமா..? வேப்பம்பூ ரசம், துவையல் பண்ணி சாப்பிடு’, 'குடல் புழுக்கள் அழிய, வேப்பங்கொட்டைய வெல்லம் கூட்டி அரைச்சுக் கொடு', 'சொறி, சிரங்குக்கு வேப்பம் பழ சர்பத் கொடு’, 'புரையோடிய புண்ணுக்கு வேப்பங்கொட்டைக் குள்ள உள்ள பருப்பை அரைச்சுப் பூசு’
- மருத்துவம் படிக்காத மங்கம்மா பாட்டியின் பழுத்த அனுபவம்..

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...