Aug 13, 2012

மின்சாரத்தில் இயங்கும் புதிய மோட்டசைக்கிள்


Boxx Corp எனும் அமெரிக்க நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டிருக்கும் Cargo Scooter முற்றிலும் மின்சாரத்தால் இயங்கக் கூடிய ஸ்கூட்டர். இது நவீன தொழில்நுட்பங்களுடன் சுற்றுச் சூழலுக்கான பாதுகாப்பை கருத்தில்கொண்டு அலுமீனியத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 56 கிலோமீற்றர் வேகத்தில் செல்லக் கூடியது. 4 மணி நேரத்தில் பற்றரியை முற்றிலுமாக சார்ஜ் செய்துகொண்டால் 64 கிலோமீற்றர் தூரம் வரை பயணம் செய்ய முடியும்.
பல பொருட்களை கொண்டு செல்வதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள Boxx Scooter  கூரியர்(Courrier) சேவையாளர்கள், மற்றும் பொருட்கள் விநியோகம் செய்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் எனக் கருதப்படுகின்றது.
பல நிறங்களில் வெளியாக இருக்கும் இந்த Scooterகள் இம் மாத முடிவில் அமெரிக்காவில் வெளியாகவுள்ளது. ஐரோப்பிய வீதிகளில் இன்னும் சில மாதங்களில் வலம்வரவிருக்கும் இந்த Scooterகளின் விலையாக தற்போது 4000 டொலர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...