Aug 22, 2012

3டி படங்களுக்கான புதிய தொழில்நுட்பம் விரைவில் அறிமுகம்



3டி படங்களை தொலைக்காட்சியில் பார்ப்பதற்காக, புதிய தொழில்நுட்பமொன்று விரைவில் அறிமுகமாக உள்ளது.இதுவரை 3டி படங்கள் ப்ளூரே தொழில்நுட்பத்தில் வந்தன. அதாவது திரையில் ஒரு காட்சி இரண்டு வடிவங்களில் இருக்கும். அது ஒரு கண்ணுக்கு ஒரு படம் என்ற வகையில் இருக்கும்.
ஆனால் ஒரே காட்சியை 10க்கும் மேற்பட்ட வடிவங்களில் பார்க்க வேண்டும் என்றால் அதற்கு ஆட்டோ ஸ்டீரியோகோபிக் டிஸ்ப்ளேக்கள் தேவைப்படும்.
ஏனெனில் இந்த திரைகள் 3டி படங்களை பல கோணங்களில் காண்பிக்க வேண்டும். மேலும் அவற்றை எங்கிருந்து பார்த்தாலும் முழுமையான 3டி அனுபவம் கிடைக்க வேண்டும்.

அதற்காக ஜேர்மனியைச் சேர்ந்த ஹெய்ன்ரிச் ஹெர்ட்ஸ் இன்ஸ்டிடியூட்டில் உள்ள ப்ரான்ஹோபர் இன்ஸ்டிடியூட் பார் டெலிகம்யூனிக்கேசனைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஒரு 3டிக்கான ஒரு புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்திருக்கின்றனர்.
இந்த புதிய தொழில் நுட்பம் ப்ளூரேயில் இருக்கும் 3டி கண்டென்ட்டை ஆட்டோ ஸ்டீரியோகோபிக் டிஸ்ப்ளேகளில் மாற்றிவிடும்.
அதனால் ப்ளூரே 3டி டஸ்க்கை செலுத்திவிட்டு கண்ணாடி அணியாமல் டிவியின் முன் அமர்ந்து சூப்பராக 3டி படங்களைப் பார்த்து மகிழலாம்.
மேலும் இந்த புதிய தொழில்நுட்பத்தை டிவியோ இணைக்க ஆய்வாளர்கள் பல நிறுவனங்களோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்த தொழில்நுட்பம் வரும் வருகிற 31ஆம் திகதி முதல் செப்டம்பர் 5ஆம் திகதி வரை பெர்லினில் நடைபெற உள்ள ஐஎப்எ வர்த்தக கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...