Aug 22, 2012

கியூரியாசிட்டி விண்கலத்தின் காற்றுமானி கருவி சேதம்



செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம், கியூரியாசிட்டி என்ற விண்கலத்தை அனுப்பியது.இந்த விண்கலம் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தில் “காலே கிரேடர்” என்ற எரிமலை பகுதியில் பத்திரமாக தரையிறங்கியது. அங்கிருந்து பாறைகள், மலைகள் உட்பட பல பகுதிகளை புகைப்படம் எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது.
விரிவான ஆய்வு மேற்கொள்ள கியூரியாசிட்டி விண்கலத்தில் 10 விதமான அதிநவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
அவற்றில் விண்ட்சென்சார் என்றழைக்கப்படும் காற்று மானி கருவியும் ஒன்று
இந்த கருவி செவ்வாய் கிரகத்தில் வீசும் காற்றின் அளவை கண்டறிவதற்கா பொருத்தப்பட்டது. தற்போது இந்த கருவி சேதமடைந்துவிட்டது. இத்தகவலை கியூரியாசிட்டி விண்கலத்தை கண்காணித்து வரும் குழு தலைவர் ஜாவியர் கோமெஷ்-எல்விரா தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், விண்கலம் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும் போது அங்கு ஏற்பட்ட நில அதிர்வினால் பாறைகள் உடைந்து சிதறின.
இதன் காரணமாக விண்கலத்தில் உள்ள வயர்களின் இணைப்பு துண்டிக்கப்பட்டு சேதம் அடைந்திருக்கலாம்.
அதனால் மிகப்பெரிய பாதிப்பு இல்லை. அதை சரி செய்து விடலாம். அதற்கான சோதனைகள் நடைபெற்று வருகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...