Aug 22, 2012

கடல், பனிப்பிரதேசத்தில் பறக்கும் விமானம்: அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை



\கடல், தரை மற்றும் பனிப்பிரதேசத்தில் பறக்கும் விமானத்தை அமெரிக்கா விஞ்ஞானிகள் தயாரித்து புதிய சாதனை படைத்துள்ளனர்.
அமெரிக்காவின் லிசா அகோயா என்ற நிறுவனம் அதி நவீன விமானத்தை வடிவமைத்துள்ளது.
இந்த விமானம் தரையில் பறக்கும் போது அதன் 2 இறக்கைகள் விரியும். தண்ணீரில் பறக்கும் போது அது படகு போன்று மாறும்.
அதே நேரத்தில் பனி பிரதேசத்தில் செல்லும் போது அதன் 2 இறக்கைகளும் பனிக்கட்டிகளை உடைத்து நொறுக்கி சீரமைத்து அதில், பயணிக்க செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் 2 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும். இதில் 2011 கி.மீட்டர் தூரம் பயணம் செய்ய முடியும். மணிக்கு 135 மைல் முதல் 155 மைல் வேகத்தில் பறக்கும் திறன் படைத்தது.
இன்னும் 2 ஆண்டுகளில் அதாவது 2014ஆம் ஆண்டு ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளில் இது விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்னதாக இந்த விமானங்கள் 70 தடவை வெற்றிகரமாக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதன் விற்பனை கண்காட்சி அமெரிக்காவின் வின்கான்சின் மாகாணத்தில் உள்ள ஒஸ்காஷ் ஏர்வென்ஞ்சர் நிறுவனத்தில் கடந்த மாதம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...