Aug 16, 2012

செவ்வாய்க் கிரகத்தைக் கண்முன் நிறுத்தும் 'கியூரியோசிட்டி' அனுப்பிய புகைப்படங்கள்





செவ்வாய்க் கிரகம் தொடர்பில் ஆராய்ச்சியை மேற்கொள்வதற்காக நாசாவினால் அனுப்பப்பட்ட 'கியூரியோசிட்டி'  விண்கலமானது அக்கிரகத்தின் தெளிவான புகைப்படங்களை பூமிக்கு அனுப்பி வருகின்றது.
 
சுமார் 8 மாதங்களாக 352 மில்லியன் மைல்களைக் கடந்து இவ்விண்கலமானது கடந்த  5 ஆம் திகதி செவ்வாய்க் கிரகத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது.
 
செவ்வாய்க்கிரகத்தில் மனிதர்கள் வாழக்கூடிய சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஆராய்ச்சி மேற்கொள்வதே 'கியூரியோசிட்டி'யின் பிரதான இலக்காகும்.
 
JKJJJஇந்நிலையில் தற்போது அவ் விண்கலமானது செவ்வாய்க் கிரகத்தின் தெளிவான வண்ணப் புகைப்படங்களை பூமிக்கு அனுப்பி வருகின்றது.  
 
'கியூரியோசிட்டியின்' தெளிவான இப்புகைப்படங்கள் செவ்வாய்க் கிரகத்தினை எம் கண்முன்னே நிறுத்துகின்றது.
 
இதனைத் தவிர அவ்விண்கலமானது தனது புகைப்படத்தினையே அதாவது விண்கலத்தின் புகைப்படத்தினையும் அனுப்பியுள்ளது. விஞ்ஞானிகள் விண்கலத்தின் பாகங்களின் நிலைகுறித்துத் தெரிந்துகொள்ளவே இதனை அது அனுப்பியுள்ளது.  
 
இதேவேளை  கியூரியோசிட்டியின் மென்பொருளை மேம்படுத்தும் நடவடிக்கையிலும் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
 
குறித்த விண்கலமானது அங்கு தரையிறங்கிய நாள் முதல் அதற்கு வழங்கப்பட்ட கட்டளைகளைச் சரிவர செய்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.      

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...