Aug 7, 2012

அழகை கெடுக்கும் நரை முடி---அழகு குறிப்புகள்.

நரை முடி இன்றைய காலகட்டத்தில் பெரும் பிரச்சனையாக மாறிவிட்டது.எத்தனையோ கலரிங் வந்தாலும் கூட உண்மையான கருப்பு நிற கலர்க்கு இருக்கும் மதிப்பே தனி என்று தான் சொல்ல வேண்டும்..

கருப்பு நிற கூந்தலை பெற என்ன செய்ய வேண்டும்..இதோ அதற்கான டிப்ஸ் சில ..


நரை முடியை முற்‌றிலும் ஒழிக்க கறிவேப்‌பிலையை உணவில் சேர்‌த்துக் கொண்டால் போதும்.குளிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் தேங்காய் எண்ணையை நன்கு தலையில் தேய்த்து  மஜாஜ் செய்ய வேண்டும்.பின்னர் தலையை தேய்த்து குளிக்க வேண்டும்..இவ்விதம் செய்தால் நல்ல அடர்தியான முடியுடன் கரு நிற கூந்தலையும் பெற முடியும்.


தலைக்கு குளித்த சில மணி நேரத்தில் தலைக்கு எண்ணெய் தடவுதல் கூடாது.. தலைக்குக் குளித்ததும் ஈரம் காய்வதற்கு முன்பே எண்ணெய் வைப்பதால்தான் பலருக்கு செம்மட்டை நிறத்தில் முடி வளர்கிறது.அதோடு முடு அதிகம் கொட்டவும் செய்கிறது..

அழகுக்கு இன்னும் சில டிப்ஸ்

தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து இரண்டு வேளை குடித்து வந்தால் முகம் வட்ட நிலவாக மின்னும். ஆர‌ஞ்சு பழசாறை ‌ஃ‌பீ‌ரிஸ‌ரி‌ல் வை‌த்து அதனை வெ‌ள்ளை‌த் து‌ணி‌யி‌ல் க‌ட்டி க‌ண்ணு‌க்கு மே‌ல் வை‌‌த்த‌ல் ந‌ல்லது.


தே‌ங்கா‌ய் எ‌ண்ணெ‌யை சூடு செ‌ய்து அ‌தி‌ல் ‌ஓம‌த்தை‌ப் போ‌‌ட்டு அதனை தலையில் தேய்த்து வந்தால் பொடுகு தீரும். துவரம் பருப்பு, மருதாணி இலை ஆகியவற்றை தயிரில் ஊறவைத்து அரைத்து பாதத்தில் பூசினா‌ல் ‌பி‌த்த வெடி‌ப்பு குறையு‌ம்.


குளிர் காலத்தில் பாதங்களில் சீரக எண்ணெயை கொதிக்க வைத்து தடவி வரலாம்.மு‌ல்தா‌னிமெ‌ட்டியை த‌ண்‌ணீ‌ரி‌ல் குழை‌த்து முக‌த்‌‌தி‌ல் தட‌வி வர முக‌ம் மல‌ர்‌ச்‌சியடையு‌‌ம்.உ‌ங்க‌ள் ‌நிற‌த்‌தி‌ற்கு ஏ‌ற்ற நக‌ப் பூ‌ச்சுகளை ம‌ட்டு‌ம் பூசு‌ங்க‌ள். அழகாக இரு‌க்கும்.


மாத‌த்‌தி‌ல் ஒரு வாரமாவது நக‌ங்களை பூ‌ச்சு‌க்க‌ள் இ‌ல்லாம‌ல் வையு‌ங்க‌ள்.முடி‌யி‌ன் நு‌‌னி‌யி‌ல் வெடி‌ப்புக‌ள் ஏ‌ற்படாம‌ல் இரு‌க்க முடியை‌ எ‌ப்போது‌ம் க‌ட்டியே வையு‌ங்க‌ள்.க‌ண்களு‌க்கு எ‌ந்த ‌வித அல‌ங்கார‌ம் செ‌ய்தாலு‌ம் உற‌ங்கு‌ம் போது ந‌ன்கு கழு‌வி ‌விடவு‌ம்.

முட்டையின் வெள்ளைப் பகு‌தியை மட்டும் தலையில் தேய்‌த்துக் குளித்தால் முடி மிருதுவாக இருக்கும்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...