Sep 14, 2012

கவுதமலாவில் எரிமலை வெடிக்கும் அபாயம்: 1 லட்சம் பேர் வெளியேற்றம்



கவுதமலாவில் எரிமலை வெடிக்கும் அபாயம்: 1 லட்சம் பேர் வெளியேற்றம்கவுதமலாசிட்டி,செப். 14-

வட அமெரிக்காவில் உள்ள கவுதமலா நாட்டில் “பியூகோ” என்ற இடத்தில் மிகப்பெரிய எரிமலை உள்ளது. அந்த எரிமலை வெடித்து சிதறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது, அது பயங்கர சத்தம் எழுப்பி வருகிறது. அதில் இருந்து சாம்பலும், புகையும் வெளியாகிறது.

எனவே, அது எந்த நேரத்திலும் வெடித்து சிதறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது நெருப்பு குழம்புடன் பாறைகள் தூக்கி வீசப்படும். இது சுமார் 1000 மீட்டர் உயரத்துக்கு எழும்பும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, பியூகோ எரிமலையை சுற்றியுள்ள கிராமங்களில் வாழும் சுமார் 1 லட்சம் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கவுதமலா அதிபர் ஒட்டோ பெரீஷ் மொலினா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...