Sep 14, 2012

சூறாவளி தாக்கும் என பயந்து குளிர்சாதன பெட்டியில் 4 நாட்கள் பதுங்கிய பெண்: உறைந்த நிலையில் உயிருடன் மீட்பு



நியூயார்க், செப்.14-
 
அமெரிக்காவில் உள்ள ஓக்லஹோமா மாகாணத்தில் வசித்து வந்தவர் தெரசா கிரிஸ்டியன் (59).  இவரை சில தினங்களாக காணவில்லை என்று அவரது உறவினர்கள் போலீசில் புகார் அளித்து தேடிவந்தனர்.
 
இந்நிலையில் பூட்டியிருந்த தெரசாவின் வீட்டை அவரது மகன் திறந்து உள்ளே நுழைந்தபோது அங்குள்ள குளிர்சாதன பெட்டி பிரீசருக்குள் இருந்து பெண்ணின் முனகல் சப்தம் வருவதை உணர்ந்தார்.
 
உடனே குளிர்சாதன பெட்டியை திறந்து பார்த்தார். அப்போது உடல் உறைந்த நிலையில் தனது தாய் உயிருக்குப் போராடியவராய் பதுங்கி இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
 
அமெரிக்காவின் ஓக்லஹோமா மாகாணத்தில் சில நாட்களுக்கு முன் பயங்கர சூறாவளி வீசியது. இதில் கடும் சேதம் ஏற்பட்டது. சூறாவளிக்கு பயந்து அவர் குளிர்சாதன பெட்டியில் பதுங்கி இருக்க கூடும் என்றும், மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படவில்லை என்றும் விசாரணையில் தெரியவந்தது.
 
என்றாலும் குளிர்சாதன பெட்டியின் வெளிப்புறம் பூட்டப்படவில்லை. உள்ளே புகுந்த தெரசா கிறிஸ்டியன் 4 நாட்களாக வெளியே வர முயற்சிக்காதது ஏன்? என்பது போலீசுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...