Sep 6, 2012

துருக்கி: வெடிமருந்து கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் ராணுவத்தினர் 25 பேர் பலி


துருக்கி: வெடிமருந்து கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் ராணுவத்தினர் 25 பேர் பலிஇஸ்தான்புல்,செப்.6-


துருக்கி நாட்டின் மேற்குப் பகுதியிலுள்ள அப்யான் நகரில் அமைந்துள்ள ராணுவத்துக்கு சொந்தமான வெடிமருந்து கிடங்கில் பரிசோதனை நேரத்தின்போது ஏற்பட்ட வெடி விபத்தில் ராணுவ வீரர்கள் 25 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 4 பேர் காயம் அடைந்துள்ளனர். அந்நாட்டு வனத்துறை அமைச்சரின் வருகையின்போது நிகழ்ந்துள்ள இந்த விபத்து துருக்கியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

இந்த விபத்துக்கான உண்மையான காரணம் குறித்து உடனடியாக எதுவும் தெரியவில்லை என ராணுவத்தினர் தெரிவித்துள்ள நிலையில், இது தற்செயலாக நிகழ்ந்த விபத்துதான் என அப்யான் நகர கவர்னர் இர்பான் கூறியுள்ளார். எனினும், துருக்கியில் அரசுக்கு எதிராகச் செயல்பட்டு வரும் குர்திஷ் தீவிரவாதிகளால் இந்த விபத்து நிகழ்ந்திருக்குமோ என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...