Sep 6, 2012

சர்ச்சைக்குரிய தீவை அளந்த ஜப்பான்: அதிர்ச்சியில் சீனா





சீனாவும், ஜப்பானும் உரிமை கொண்டாடும் பிரச்னைக்குரிய தீவில் ஜப்பானிய நில ஆய்வாளர்கள் சென்று அளவிடும் பணியை தொடங்கினர்.சீனாவுக்கும், ஜப்பானுக்கும் இடையே உள்ளது ஷென்காகு தீவு. இந்த தீவை சீனா டையாயூ என்றழைக்கிறது.
பண்டை காலம் தொட்டு இந்த தீவு தங்கள் எல்லைக்குட்பட்டு இருப்பதாக சீனாவும், கடந்த 1890ஆம் ஆண்டு முதல் இந்த தீவு தங்கள் வசம் இருப்பதாக ஜப்பானும், உரிமை கொண்டாடி வருகின்றன.
பிரச்னைக்குரிய இந்த தீவில் மனித நடமாட்டம் கிடையாது. இந்த தீவைச் சுற்றிலும் எரிவாயு அதிகம் கிடைப்பதால் சீனா இந்த பகுதியைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

இதற்கிடையே கடந்த மாதம் 18ஆம் திகதி ஜப்பானிய ஆதரவாளர்கள் 150 பேர் இந்த தீவுக்குச் சென்று ஜப்பானிய கொடிகளை பறக்க விட்டனர். இந்த தீவில் ஜப்பான் சார்பில் கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்தது. இதற்கிடையே இந்த தீவை தனியாருக்கு விற்க திட்டமிட்டுள்ளதாக டோக்கியோ கவர்னர் சூசகமாக தெரிவித்திருந்தார்.
இவரது அறிவிப்பை தொடர்ந்து ஜப்பானிய நில அளவையாளர்கள் இத்தீவுக்கு நேற்று சென்று அங்குள்ள மரங்கள், நிலத்தின் அமைப்பு ஆகியவற்றை ஆய்வு செய்தனர். இதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...