Sep 18, 2012

குழந்தை இறப்பை தவிர்க்க கர்ப்பிணி பெண்களுக்கு நிபுணர்கள் அறிவுரை

பொதுவாக கர்ப்பிணி தாய்மார்கள் தங்கள் கர்ப்ப காலத்தில் நடந்து கொள்ளும் முறையை பொறுத்து குழந்தை பிறப்பு எளிதாக நிகழ்கிறது. எனினும், சில சமயங்களில் கருவில் இருக்கும் குழந்தை, பிறப்பதற்கு முன்பே இறந்து விடும் சூழல் ஏற்படுகிறது. இதனை ஸ்டில்&பெர்த் என்றழைக்கின்றனர். இதற்கு பெண்களின் உடல் எடை அதிகரித்தல், அதிக வயதில் தாய்மையடைதல் மற்றும் தொப்புள் கொடியின் நிலை ஆகியவை காரணமாக கூறப்பட்டாலும் தாய்மார்கள் படுக்கும் விதமும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து பல்கலைகழக ஆய்வொன்று தெரிவிக்கிறது. கர்ப்பிணிகள் வலது புறம் படுப்பதால் குழந்தை இறப்பு விகிதம் இரு மடங்காகிற அதே வேளையில், இடது புறம் படுத்துறங்குவதால் 1000க்கு 4 என்ற அளவிலேயே இறப்பு விகிதம் ஏற்படுகிறது. இடது புறம் படுப்பதால் தாயின் இரத்த நாளங்கள் சீராக இருப்பதுடன் குழந்தைக்கும் தாய்க்குமிடையேயான இரத்த ஓட்டம் சீராக அமைவதும் தெரிய வந்துள்ளது. உலகில் இங்கிலாந்து நாட்டில் தான் அதிகமாக குழந்தைகள் இறப்பு விகிதம்(ஸ்டில்&பெர்த்) காணப்படுகிறது. அங்கு வருடத்திற்கு 4,000 குழந்தைகள் பிறப்பதற்கு முன்பே இறந்து விடுகின்றன. மேலும் 3ல் 1 பங்கு குழந்தைகள் இறப்பதற்கான மிக சரியான காரணம் என்னவென்று தெரியவில்லை என்பது வருத்தத்திற்குரிய விசயம். இதனை தடுப்பதற்காக தூங்கும் முறையில் மேற்கொண்டு ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...