Sep 18, 2012

ஹிப்னாடிசம் முறையில் எளிதாகும் அறுவை சிகிச்சை



பெல்ஜியம் நாட்டிலுள்ள கத்தோலிக் டி லூவெய்ன் என்ற பல்கலைகழகத்தின் பேராசிரியர் பேபியன் ரோயெலன்ட்ஸ் என்பவர் மார்பக புற்றுநோய் மற்றும் தைராய்டு சுரப்பி அறுவை சிகிச்சையின் போது நோயாளிகளுக்கு ஹிப்னாடிசம் முறையை பயன்படுத்துவதால் அதிக பலன் கிடைப்பதாக தனது ஆய்வில் தெரிவித்துள்ளார். அவரது ஆய்வில், மேற்குறிப்பிட்ட நோயாளிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு அறுவை சிகிச்சைக்கு முன்பு ஹிப்னாடிசம் முறையோடு கூடிய அனஸ்தீசியா கொடுக்கப்பட்டது. இதில், சிகிச்சைக்கு உள்ளானவர்கள் மற்ற சாதாரண நோயாளிகளை காட்டிலும் அதிவிரைவில் குணமடைந்து வீட்டிற்கு திரும்பினர். மேலும் அவர்களுக்கு வலி மிக குறைவாக இருந்ததும் மற்றும் புற்று கட்டிகள் பிற இடங்களுக்கு பரவாமல் இருப்பதும் இச்சிகிச்சை முறையின் பெரும்பயனாக அமைவதாக ஆய்வு முடிவில் ரோயெலன்ட்ஸ் தெரிவிக்கிறார். இம்முறையினால் கண், காது, மூக்கு, தொண்டை, மூட்டு, வயிறு இறக்கம் போன்ற அறுவை சிகிச்சைகளும், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மற்றும் பெண்களின் கரு முட்டையை நீக்கி மேற்கொள்ளப்படும் ஐ.வி.எப். சிகிச்சை முறை ஆகியவை மிக எளிதாக அமையும் என அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...