Sep 13, 2012

உடலில் ஏற்படும் இதயத்தின் துடிப்பை, உடலின் பல்வேறு பாகங்களில் நன்கு உணர முடியும். அதிலும் நிறைய பேர் அத்தகைய துடிப்பை மணிக்கட்டில் மட்டும் தான் உணர முடியும் என்று நினைக்கின்றனர். ஆனால் அந்த துடிப்பை கழுத்து, கால்களில் கூட உணர முடியும். இப்போது உடலில் உள்ள நாடித்துடிப்பு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ துடித்தால், உடலில் ஏதோ ஒரு பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். சொல்லப்போனால், உடலில் ஏதேனும் ஒரு நோய் ஏற்பட்டாலும், மருத்துவர்களிடம் சென்றால், அவர்கள் முதலில் அந்த துடிப்பை பார்த்து தான் மற்ற முடிவுகளை எடுப்பார்கள். மேலும் யாரேனும் உயிருடன்
இருக்கிறார்களா, இல்லையா என்பதையும் அந்த நாடித்துடிப்பை வைத்து தான் முடிவெடுப்பார்கள்.
ஒருவருக்கு சரியான துடிப்பு என்றால் எவ்வளவு?
ஒரு ஆரோக்கியமான இளைஞனுக்கு ஒரு நிமிடத்திற்கு 72 முறை துடிக்கும். ஆனால் அந்த துடிப்பு, பாலினம், வாழ்க்கை முறையை பொறுத்து மாறுபடும். உதாரணமாக, ஒரு விளையாட்டு வீரர் என்றால் அவர்களுக்கு நிமிடத்திற்கு 50 முதல் 60 வரை துடிக்கும். அதுமட்டுமல்லாமல், கைக்குழந்தைகளுக்கு அதிகமாக 100 முதல் 160 வரையில் துடிக்கும். சிறு குழந்தைகளுக்கு 100 முதல் 120 வரை துடிக்கும். அதுவே சற்று பெரிய குழந்தைகள் என்றால் 70 முதல் 80 வரை துடிக்கும். ஆனால் இயற்கையாகவே சாப்பிடும் போது, உடற்பயிற்சி செய்யும் போதெல்லாம் நாடித்துடிப்புகள் அதிகரிக்கும்.
நாடித்துடிப்புகள் எதற்கெல்லாம் அதிகமாகும்?
* அதிகமான எடை இருந்தால் உடலில் இரத்த அழுத்தம் அதிகரிக்கும். மேலும் உடலில் அதிக அளவு கொழுப்புக்கள் சேர்வதால், இதயத்திற்கு அதிக அளவு அழுத்தம் ஏற்படும். இதனால் அவர்களால் சரியாக மூச்சு விட முடியாத அளவு போய்விடும். அதனால் தான் குண்டாக இருப்பவர்களுக்கு விரைவில் இதய நோய் வந்துவிடுகிறது.
* கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு நாடித்துடிப்புகள் ஒரு நிமிடத்திற்கு 150 துடிப்புகள் ஏற்படும். பழைய காலத்தில் எல்லாம் கர்ப்பமாக இருக்கிறார்களா என்று அறிய எந்த ஒரு டெஸ்ட்களும் இருக்காது. அப்போது அவர்கள் நாடித்துடிப்பை வைத்து தான் கர்ப்பத்தை அறிவார்கள். ஏனெனில் அந்த நேரத்தில் உடலில் உள்ள இரத்தத்தின் அளவு அதிகரிக்கும். மேலும் இதயம் உடல் முழுவதும் இரத்தத்தை செலுத்துவதற்கு சற்று கடினமாக வேலை செய்யும். இது மிகவும் சாதாரணமானது தான். இருப்பினும் கர்ப்பமாக இருக்கும் போது இரத்த அழுத்தத்தை அறிய வேண்டும்.
* உடலில் இரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால், மருத்துவர்கள் புகை பிடிப்பதை நிறுத்த சொல்வார்கள். ஏனெனில் அதில் இருக்கும் நிக்கோட்டின் மற்றும் புகையிலை, இதயத்துடிப்பை அதிகரிக்கும். இதனால் உடலில் சாதாரணமாக இருக்கும் இரத்த அழுத்தம், இதைப் பிடிப்பதால், நாடித்துடிப்புகள் மிகவும் அதிகரிக்கும்.
எனவே உங்கள் நாடித்துடிப்புகளை அறிந்து கொண்டு, உடலை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...