Sep 13, 2012


சென்னை காவல்துறை பேஸ் புக்கில் இணைந்துள்ளது. பேஸ் புக் சென்று kaval thurai  என்று டைப் செய்தால் முகப்பு தோற்றத்தில் சென்னை மெரினா கடற்கரை எதிரே அமைந்துள்ள டிஜிபி வளாகத்தின் பிரமாண்ட தோற்றம் வரும். தொடர்ந்து வங்கி மோசடி பற்றியும் அதில் மக்கள் எப்படி விழிப்போடு இருக்க வேண்டும் என்றும் விழிப்புணர்வு செய்யப்பட்டிருக்கும்.
மேலும், வேலை வாங்கித் தருவதாக மோசடி, சைபர் குற்றங்கள், இணைய தள குற்றங்கள் போன்றவைகள் குறித்தும் விளக்கப் பட்டிருக்கும்
. அனைவருக்கும் எளிதில் புரியும் வண்ணம் கார்ட்டூன் மூலம் தகவல் சொல்லப்பட்டுள்ளது. குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபரீதங்கள், கார்களில் ஒட்டப்பட்டிருக்கும் விதிமுறைக்கு மீறிய கருப்பு பிலிம்களை போலீசார் அகற்றுவது, இரண்டுக்கும் மேற்பட்டோர் பைக்கில் செல்லுவதால் நிகழும் அசம்பாவிதங்கள், கண்காணிப்பு கோபுரத்தில் அமர்ந்து கொண்டு போலீசார் பணி செய்வது உள்ளிட்ட பல புகைப்படங்கள் பேஸ் புக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விதிமுறைகளை மீறினால் விதிக்கப்படும் அபராதம் போன்றவை காவல்துறைக்கான பேஸ் புக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் போலீசின் செயல்பாடுகள், திட்டங்கள், சலுகைகள் உள்ளிட்ட அனை த்து தகவல்களும் இடம் பெற்றுள்ளனர். இதில், இணையும் உறுப்பினர்கள் மோசடி பற்றி தகவல் தெரிந்தால் அதில் குறிப்பிடலாம். போலீசார் செய்யும் விழிப்புணர்வு தகவல்கள் அனைத்தும் பேஸ் புக்கில் இணைந்துள்ளவர்களுக்கு உடனுக்குடன் தெரியவரும். முதற்கட்டமாக 100க்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளனர்.
இதற்கு போலீஸ் மற்றும் பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...