Oct 1, 2012

கொலம்பியாவில் இன்று கடுமையான நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 7.4 பதிவு October 2012

quake_01
October 1, 2012Thursday, 01
வாஷிங்டன் : தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில், போபயான் பகுதியில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. நாட்டின் தென்மேற்கு பகுதியில் ஈக்குவேடார் நாட்டின் எல்லையோரம் நிகழ்ந்த இந்த கடுமையான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4  ஆக பதிவானது.
முதலில் 7.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் பின்னர் அடுத்து அடுத்து நடந்த அதிர்வில் அதிகபட்சமாக  7. 4 ஆக பதிவாகியுள்ளது. போபயான் பகுதிக்கு தெற்கே 28 வது கிலோமீட்டரில் இந்த பூகம்பத்தின் மையம் இருந்ததாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடுமையான நிலநடுக்கத்தின் பாதிப்புகள் குறித்த செய்திகள் உடனடியாக தெரியவரவில்லை.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...