Oct 1, 2012

மத்திய அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெற்றது ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா

 திங்கட்கிழமை, அக்டோபர் 01,
மத்திய அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெற்றது ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சாபுதுடெல்லி,


சில்லரை வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீட்டுக்கு அனுமதி அளிக்க முடிவெடுத்தது, டீசல் விலையை உயர்த்தியது உள்ளிட்ட மத்திய அரசின் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் தலைமையிலான ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அளித்துவந்த ஆதரவை, மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சமீபத்தில் வாபஸ் பெற்றது.

இதே காரணத்துக்காக பாபுலால் மராண்டி தலைமையிலான ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா கட்சியும் அரசுக்கு அளித்துவந்த ஆதரவை இன்று வாபஸ் பெற்றது. எனினும், இரண்டு எம்.பி.க்களை மட்டுமே கொண்ட அக்கட்சி தனது ஆதரவை வாபஸ் பெற்றுக்கொண்டதால் மத்திய அரசுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.  

ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வரான பாபுலால் மராண்டி, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது அக்கூட்டணியில் அங்கம் வகித்ததோடு, மத்திய அமைச்சர் பதவியும் வகித்தார். அவரது ஆதரவுடன் கடந்த 1998-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் ஜார்க்கண்டில் மொத்தமுள்ள 18 பாராளுமன்ற தொகுதிகளில் 14 தொகுதிகளை தேசிய ஜனநாயகக் கூட்டணி கைப்பற்றியது. அதன்பின்னர் 2006- ஆண்டில் அவர் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து பிரிந்து, ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இணைந்தார்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...