Oct 1, 2012

ஜப்பானில் “ஜிலாவத்’ சூறாவளி புயல் : விமானம், ரயில் சேவை ரத்து October 1, 2012Thursday, 01

டோக்கியோ : ஜப்பானை சூறாவளி புயல் தாக்கியுள்ளதால், பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன.ஜப்பானின், டோக்கியோ மற்றும் ஒகினாவா பகுதிகளை, “ஜிலாவத்’ என்ற புயல் தாக்கியுள்ளது. இதன் காரணமாக, 144 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. இதனால், பல்வேறு இடங்களில் மரங்களும், விளக்கு மற்றும் சிக்னல் கம்பங்களும் தெருக்களில் சாய்ந்தன.மின் கம்பிகள் அறுந்து விழுந்துள்ளதால், பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. தகவல் தொடர்பு கோபுரங்கள் சாய்ந்துள்ளதால், தொலைபேசி இணைப்புகளும் துண்டிக்கப்பட்டு உள்ளன.பலத்த காற்று வீசி வருவதால், ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. புயல் காற்று காரணமாக, பலத்த மழைக்கான எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது
puyal_01

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...