Oct 8, 2012

உலக சனத்தொகை 7 பில்லியன், அதில் ஒரு பில்லியன் மக்கள் பேஸ்புக் பயன்படுத்துகின்றனர்; மகிழ்ச்சியில் சூக்கர் பேர்க்

உலக சனத்தொகை 7 பில்லியன், அதில் ஒரு பில்லியன் மக்கள் பேஸ்புக் பயன்படுத்துகின்றனர்; மகிழ்ச்சியில் சூக்கர் பேர்க்

உலகின் முன்னணி சமூக வலைத்தளமான பேஸ்புக், ஒரு பில்லியன் பாவணையாளர்களை கடந்துள்ளது.2004ம் ஆண்டு மார்க் சூக்கர் பேர்க்கரினால் ஆரம்பிக்கப்பட்ட பேஸ்புக் இத்தளம், தற்போது, 1.13 டிரில்லியன் லைக்ஸ், 219 பில்லியன் புகைப்படங்கள், 17 மில்லியன் அங்கத்துவர்களின் இட விபரம் என்பவற்றை கொண்டிருக்கிறது.
எனக்கும், எனது சிறிய குழுவினருக்கும் உங்களுக்கு சேவை செய்ய நீங்கள் கொடுக்கும் உயர்ந்த கௌரவத்திற்கு மிக்க நன்றி என இந்நாளில் சூக்கர் பேர்க் தனது பேஸ்புக் ஸ்டேடஸில் அப்டேட் செய்துள்ளார்
.
ஒரு பில்லியன் மக்களிடையே தொடர்பு ஏற்படுத்தியது எனது வாழ்நாளில் நான் மிக பெருமைப்பட்டுக்கொள்ளும், தருணம் என அவர் மேலும் கூறுகிறார். இதில், 600 மில்லியன் பேர் தற்போது தமது மொபைல் கைபேசிகள் மூலம் பேஸ்புக் உபயோகிக்கிறார்கள்.
அண்மையில் தனது பங்குகளை வெளிப்படையாக விற்க தொடங்கிய பேஸ்புக் ஆரம்பத்தில் 38 அமெரிக்க டாலருக்கு தொடங்கிய விற்பனை, பின்னர் பெரும் வீழ்ச்சியின் பின்னர், 22 அமெரிக்க டாலருக்கு பங்கு விலையை தக்கவைத்திருக்கிறது.
கடந்த 8 வருடங்களுக்குள் பேஸ்புக், சேவை அடிப்படையில் அபார வளர்ச்சி கண்டுள்ள போதும் சீனா, ரஷ்யா போன்ற நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்த முடியவில்லை. பேஸ்புக் உபயோகிப்பவர்களில் மொத்த தொகையில் ஆசிய மக்கள் 6.68% வீதமும், ஆபிரிக்க மக்கள் 5.15% வீதமும் மட்டுமே இடம்பெற்றிருக்கிறனர். ஆனால் பேஸ்புக்கின் பாவனையாளர்கள் அதிகமாக இருக்கும் நாடுகளில் இந்தியாவும் இடம்பெற்றிருக்கிறது.
கடந்த மாதம் மொஸ்கோவுக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த சூக்கர் பேர்க் அங்கு முதன்முறையாக தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நேரடி அரட்டை நிகழ்வில் பங்கெடுத்தார். அதோடு ரஷ்ய அதிபர் திமித்ரி மெத்வெதேவையும் சந்தித்தார். அதோடு சீனாவுக்கும் அவர் விஜயம் மேற்கொண்டுள்ளார்.
ரஷ்யாவில், Vkontakte (In Touch) எனும் சமூக வலைத்தளமே மிக பிரபலம். பேஸ்புக்கிற்கு அங்கு 7 மில்லியன் அங்கத்துவர்கள் மட்டுமே உள்ளனர். ஆனால் Vkontakte ற்கு 100 மில்லியன் அங்கத்துவர்கள் உள்ளனர். இதே போன்று சீனாவில், Renren எனும் பேஸ்புக் மாற்றீடு சேவையும், டுவிட்டருக்கு பதில் Sina Weibo சேவையும் மிக பிரபலம்.
எனவே இந்த நாடுகளில் பேஸ்புக்கின் பாவனையை அதிகரிப்பதற்காகவே சூக்கர்பேர்கரின் சுற்றுப்பயணம் அமைந்திருப்பதாக தெரிவிக்கபப்டுகிறது. பேஸ்புக் ஒரு மில்லியன் பாவணையாளர்களை கடந்துள்ள நிலையில் இதில் சுவாரஷ்யமான சில தகவல்கள் :
பேஸ்புக்கை அதிகமாக பாவிப்பவர்கள் 22 வயதுடைய நபர்கள். அதிகமாக பேஸ்புக் உபயோகிக்கப்படும் நாடுகளில், பிரேசில், இந்தியா, இந்தோனேசியா, மெக்ஸிகோ, அமெரிக்கா அடங்கும்.
பேஸ்புக் எதிர்கொண்டிருக்கும் மிகப்பெரும் இரண்டு சவால்கள்
1.ஒரு பில்லியன் பேரை சம்பாதித்திருக்கும் பேஸ்புக், அடுத்த பில்லியன் பாவணனையாளர்களை எங்கிருந்து எப்படி உருவாக்க போகிறது? அதாவது இந்த அடுத்த பில்லியனில் கணணிவசதி இல்லாதவர்களே அதிகம். ஆனால் கவனிக்க. உலக சனத்தொகை 7 பில்லியன் என்பதால் பேஸ்புக் வளவர்வதற்கு இன்னமும் அதிக இடமுண்டு.
2.மேற்குலகத்தை மட்டுமே பெரிதும் பேஸ்புக் கவர்ந்துள்ளது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...