Oct 8, 2012

வட கொரியாவை தாக்க அமெரிக்காவுடன் கைகோர்க்கிறது தென் கொரியா



அமெரிக்காவின் உதவியுடன் வட கொரியா முழுமையும் சென்று தாக்கும் வகையில் தன் ஏவுகணை திறனை மும்மடங்கு அதிகரிக்கவுள்ளது தென் கொரியா.அமெரிக்காவுடன் மேற்கொண்டுள்ள புதிய ஒப்பந்தத்தின்படி, 800 கிலோமீற்றர் தொலைவு சென்று தாக்கும் வகையில் ஏவுகணைகளை தென் கொரியா தயாரிக்கவுள்ளது.
தென் கொரியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சுன் யுங்-வூ இதனை உறுதிப்படுத்தியுள்ளார். அவர் கூறுகையில், வடகொரியாவின் இராணுவ அச்சுறுத்தல்களை சமாளிக்கும் விதத்தில் இந்த சீரமைப்பு மேற்கொள்ளப்பட
உள்ளது.
இருப்பினும் ஏவுகணையின் 500 கிலோ சுமை திறன் அதிகரிக்கப்படவில்லை. குறுகிய தூர ஏவுகணைகளில் சுமைதிறனை அதிகரிக்க அனுமதி கோரப்பட்டுள்ளது.
800 கிலோ மீற்றர் தொலைவு சென்று தாக்கும் வகையில் ஏவுகணையின் திறன் அதிகரிக்கப்படுவதன் மூலம், வடகொரியா முழுவதும், சீனா, ஜப்பான் நாடுகளின் சில பகுதிகளையும் தாக்குதல் இலக்கில் கொண்டு வர முடியும்.
தென் கொரியாவும் அமெரிக்காவும் செய்து கொண்டுள்ள இராணுவ ஒப்பந்தத்தின்படி, தென் கொரியாவில் 28 ஆயிரத்து அமெரிக்க இராணுவ வீரர்கள் உள்ளனர். தென் கொரியா மீது வட கொரியா அணு ஆயுதத் தாக்குதல் நடத்தினால் அமெரிக்கா, தென் கொரியாவுக்கு ஆதரவாகக் களமிறங்கும் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் வட கொரியா அணு ஆயுத ஏவுகணைப் பரிசோதனையில் ஈடுபட்டதை அடுத்து, தென் கொரியாவும் ஏவுகணைத் திறனை அதிகரிக்க அனுமதி கோரியது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...