Oct 8, 2012

உலகிலேயே மிகவும் வயதான பெண் காலமானார்

உலகிலேயே மிகவும் வயதானவராகக் கருதப்பட்ட 132 வயது மூதாட்டி, ஜார்ஜியாவில் காலமானார்.
 முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளுள் ஒன்றான ஜார்ஜியாவைச் சேர்ந்தவர் அண்டிசா க்விசாவா. அவர் வைத்திருந்த ஆவணங்களில் கடந்த 1880ஆம் ஆண்டு ஜூலை 8-ல் அவர் பிறந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இதன் உண்மைத்தன்மை குறித்து சந்தேகங்கள் ஏற்கெனவே எழுப்பப்பட்டன. ஆவணங்களில் இருப்பது அவரது சரியான பிறந்த நாள்தான் என்பது நிரூபிக்கப்படவில்லை. ஜார்ஜியாவின் தொலைதூர மலைக் கிராமமான சாச்சினோவில் வசித்த அவர் தேயிலை பறிப்பவராக வேலை பார்த்து வந்தார். இந்தப் பணியில் இருந்து 1965ஆம் ஆண்டு ஓய்வு பெற்றபோது ஆண்டிசாவுக்கு வயது 85 என்று கூறப்பட்டது.
 அவருக்கு 12 பேரக் குழந்தைகளும், 18 கொள்ளுப் பேரக் குழந்தைகளும்

உள்ளனர். நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த ஆண்டிசா தினமும் உள்ளூர் பிராந்தியைச் சிறிய அளவில் சாப்பிட்டு வந்ததாக குடும்பத்தார் தெரிவித்தனர். இந்நிலையில், அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமானார். கடைசி காலத்தில் 42 வயது பேரனுடன் வாழ்ந்து வந்த அவர், இரண்டு உலகப் போர்கள் மற்றும் ரஷியப் புரட்சி நடைபெற்ற காலத்தில் வாழ்ந்தவர் என்று உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
 ஆண்டிசாவின் பிறப்புச் சான்றிதழ் தொலைந்து விட்டாலும், சோவியத் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த இரண்டு ஆவணங்களை அவர் வைத்திருந்தார். அதன்படி அவருக்கு 132 வயது என்றும் உலகிலேயே வயதான நபர் அவர் என்றும் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...