Oct 9, 2012

சங்கீத நாடக அகடாமி விருது : பல்வேறு கலைத்துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு விருது வழங்கி கௌரவம்


இன்று டெல்லியில் சங்கீத நாடக அகடாமி 2011ற்கான விருது நிகழ்வில் இசை, நாடகம்,நடனம் மற்றும் பல்வேறு கலைத்துறைகளில் பங்காற்றி சாதனை படைத்த கலைஞர்களுக்கு ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி விருது வழங்கி கௌரவித்தார்.

டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைப்பெற்ற இவ் விருது வழங்கும் விழாவில் கலைத்துறையிலும் வெவ்வேறு துறையிலும் சாதனைப் படைத்த 41 கலைஞர்களுக்கு சங்கீத நாடக அகடாமி விருதுகள் வழங்கப்பட்டது.

இதில் புகழ்பெற்ற அஜ்மத் அலிகான், சந்தூர் சிவக்குமார்சர்மா, புல்லாங்குழல் வித்வான் ஹரிபிரசாத் சவுராசியா, மிருதங்கவித்தவான் உமையாள்புரம் சிவராமன் உள்ளிட்ட முக்கிய கலைஞர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. அத்துடன் கேரளாவைச் சேர்ந்த 91 வயது இசைக்கலைஞர் திரிப்பிக்குளம் அச்சுதா மராருக்கும், 48 வயது பரதநாட்டிய கலைஞர் நர்த்தகி நட்ராஜூக்கும் விருதுகள் வழங்கப்பட்டது இவ் விழாவில் முக்கிய நிகழ்வாக இருந்தது. மேலும் பல்வேறு துறையைச்சேர்ந்த கலைஞர்களுக்கு ஜனாதிபதி பிராணப் முகர்ஜி விருது வழங்கி கௌரவித்தார்

இதேவேளை மலேசிய நாட்டினைச் சேர்ந்த புகழ்பெற்ற இந்திய பாரம்பரிய நடனக் கலைஞர் ராம்லி இப்ராகிம் அவர்களும் விருது பெற்றார். ஒடிசி நடனத்திற்கு ராம்லி இப்ராகிம் அளித்த பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இவ் விருது வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய சங்கீத நாடக அகடாமி விருது பெரும் முதல் மலேசியர் எனும் பெருமை பெற்றுள்ளார் ராம்லி இப்ராகிம்.


No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...