Oct 9, 2012

அமெரிக்க தளங்களை தமது ஏவுகணைகளால் தாக்கி அழிக்க முடியும் : வடகொரியா எச்சரிக்கை


தம்மிடம் உள்ள யுத்த ஏவுகணைகள், அயல் நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை தாக்க கூடியன என வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென் கொரியா மற்றும் அமெரிக்கா இடையே ஏவுகணைகள் ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டதன் இரு நாட்களுக்கு பின்னர் வடகொரியா இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. அமெரிக்க அரசு தென்கொரியாவுடன் இணைந்து கண்டம் விட்டுக் கண்டம் பாயக்கூடிய ஏவுகணையின் வீச்சங்களை அதிகரிப்பதற்கான தொழிநுட்பங்களை வழங்கும் ஒப்பந்தத்தை
மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜப்பான், குவாம், மற்றும் US Mainland ஆகிய அமெரிக்க தளங்களை நேரில் சென்று தாக்கி அழிக்க கூடிய அளவு நீண்டதூரம் செல்ல கூடிய ஏவுகணைகள் தம்மிடம் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள வடகொரிய, அமெரிக்கா- தெ.கொரியா ஒப்பந்தமானது போரை மூளச்செய்ய அமெரிக்கா செய்யும் மற்றுமொரு சதி என குற்றம்சுமத்தியுள்ளது.

வடகொரியா இந்த அறிவிப்பை வெளியிட்ட போதும், கடந்த 2009 ஏப்ரல், கடந்த 2012 ஏப்ரல் என இரு தடவை இந்த ஏவுகணைகளை வடகொரியா பரிசோதித்த போது அவை தோல்வியில் முடிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக US Mainland ஐ பிரதானமாக தாக்கும் வகையில் உருவாக்கியிருந்த ஏவுகணை பரிசோதனை முயற்சி இன்னமும் வெற்றிகரமாக பரிசோதிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

தென் கொரியாவில் சுமார் 28,00 அமெரிக்க இராணுவம் பாதுகாப்பு காரணங்களுக்காக நிலை நிறுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...