Oct 21, 2012

படுக்கை புண் வராமல் தடுக்க விசேஷ மின்சார உள்ளாடை

டோரோண்டோ:நோயாளிகளுக்கு, படுக்கை புண் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், மின் ஆற்றல் கொண்ட உள்ளாடை ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்து உள்ளனர்.
படுத்த படுக்கையாக இருக்கும் நோயாளிகளுக்கு, பின்புறத்தில் படுக்கை புண் ஏற்பட்டு மிகவும் சிரமத்திற்கு உள்ளாவர்.ஒரே இடத்தில் அசையாமல் படுத்திருப்பதால், ரத்த ஓட்டம் தடைபட்டு அதனால் புண் ஏற்படும். இதற்கு தீர்வு காணும் விதமாக, கனடா நாட்டு மருத்துவர்கள் இதற்காக பிரத்யேகமான உள்ளாடை ஒன்றை வடிவமைத்துள்ளனர்.
இந்த உள்ளாடையில் பொருத்தப்பட்டுள்ள இரண்டு மின் திண்டுகளும் 12 மணி நேரத்திற்கு, ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு ஒரு முறை, மின் அதிர்வை ஏற்படுத்தும். இந்த அதிர்வு 10 வினாடிகள் நீடித்திருக்கும். 37 பேரிடம் இந்த சோதனை செய்து பார்க்கப்பட்டதில், இந்த உள்ளாடைகள் உடல் அசைவது போன்ற நிலையை ஏற்படுத்தி படுக்கை புண்கள் வராமல் தடுத்தன.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...