Oct 21, 2012

கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ கவலைக்கிடம்?

ஹவானா: கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ மரண படுக்கையில் இருப்பதாக மீடியாக்களில் வெளிவந்த தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராணுவ புரட்சி மூலம் கியூபாவை பிடித்தவர் பிடல் காஸ்ட்ரோ (86). பல ஆண்டுகள் கியூபாவின் அதிபராக பதவி வகித்தவர். உடல்நலக் குறைவு காரணமாக தனது சகோதரர் ரவுல் காஸ்ட்ரோவிடம் அதிபர் பதவியை கொடுத்து   விட்டு பதவி விலகினார். இந்நிலையில் பிடல் காஸ்ட்ரோ மரண படுக்கையில் இருப்பதாகவும், அசைவற்று இருப்பதாகவும், செயற்கை சுவாசத்தில் இருப்பதாகவும் பல்வேறு தகவல்கள் மீடியாக்களில் வெளியாகின.  Ôபிடல் காஸ்ட்ரோவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரம்தான் அவர் உயிருடன் இருப்பார்Õ என்றெல்லாம் ஆன்லைனில் தகவல்கள் வேகமாக பரவின. வெனிசுலா
அதிபர் ஹூகோ சாவேஸ், பிடலுக்கு நெருங்கிய நண்பர். இவர் சமீபத்தில் கியூபா வந்து அவரை சந்தித்துள்ளார். தற்போது பிடல் மரண படுக்கையில் இருக்கும் தகவல் எங்களுக்கு வெனிசுலாவில் இருந்து கிடைத்தது என்று பிடல் காஸ்ட்ரோவின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், வெனிசுலாவில் இந்த தகவலை யார் கொடுத்தது என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...