Oct 21, 2012

வானாட் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

சிட்னி:தெற்கு பசிபிக் கடலில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. தெற்கு பசிபிக் கடலின் வானாட் தீவுப்பகுதி அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் தீவுப்பகுதியாகும். இத்தீவின் போர்ட்வில்லா கடல்பகுதியில் இன்று காலை 35 கி.மீ. கடல் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது .இது ரி்க்டர் அளவு கோலில் 6.6 ஆக பதிவானது. இத்தீவைச்சுற்றியுள்ள கட்டடங்கள் குலுங்கின. சேத விவரம் ‌வெளியிடப்பட்டவில்லை. இதையடுத்து சுனாமி எச்சரிக்க‌ை விடப்பட்டு பின்னர் வாபஸ் பெறப்பட்டதாக அமெரிக்க புவியியல் வானிலை மையம் (யு.எஸ்.ஜி.எஸ்.) தெரிவித்தது. இதே பகுதியில் தான் கடந்த ஆண்டு 7.0 ரிக்டர் அளவு கோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...