Oct 31, 2012

இந்தியாவுக்கு ஆயுதங்கள் வழங்குவதில் ரஷ்யாவுக்கு அடுத்த இடத்தில் இஸ்ரேல்!

 10 Bn Business How Israel Became

, செப்டம்பர் 24, 2012,

Get the Google App & Chrome and Start Searching. It's Quick & Easy.
டெல்லி: இந்தியாவுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்வதில் ரஷ்யாவுக்கு அடுத்த இடத்தை இஸ்ரேல் பிடித்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவுக்கு ரூ. 50,000 கோடிக்கும் அதிகமான ஆயுதங்களை இஸ்ரேல் ஏற்றுமதி செய்துள்ளது. 2009ம் ஆண்டில் ரஷ்யாவை விட அதிகமான ஆயுதங்களை இந்தியாவுக்கு இஸ்ரேல் ஏற்றுமதி செய்துள்ளது.
குறிப்பாக நீர்மூழ்கிகளில் பயன்படுத்தப்படும் ஏவுகணைகள், உளவு செயற்கைக் கோள்கள் தொடர்பான கருவிகள், விமானங்கள்-ஹெலிகாப்டர்களில் பயன்படுத்தப்படும் லேசர் உதவியிலான ஏவுகணைகள்,
ஏவுகணைகள் எதிர்ப்பு ஏவுகணைகள், ராக்கெட் எதிர்ப்பு ஏவுகணைகள், பல வகையான ரேடார்கள், கண்காணிப்புப் படகுகள், ஆளில்லா உளவு விமானங்கள், பறக்கும் ரேடார்கள் (Airborne Warning and Control Systems) ஆகியவற்றை இஸ்ரேலிடம் இருந்து இந்தியா வாங்கி வருகிறது.
மேலும் ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்ட போர் விமானங்கள், டாங்கிகள், பீரங்கிகளை மேம்படுத்தும் திட்டங்களும் இஸ்ரேலிடம் தரப்பட்டுள்ளன.
இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி நிறுவனமான டிஆர்டிஓ, இஸ்ரேலிய பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து ஆயுத தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளது.
இஸ்ரேலின் பராக் ரக ஏவுகணைகள் MR-SAM (medium-range surface to air missiles) என்ற பெயரில் இந்திய போர்க் கப்பல்களில் பொறுத்தப்பட்டு வருகின்றன. ரூ. 10,400 கோடி மதிப்பிலான இந்தத் திட்டத்தின் கீழ், இந்திய போர்க் கப்பல்களின் தாக்குதல் திறன் பல மடங்கு மேம்படுத்தப்பட்டு வருகிறது.
இந் நிலையில் இந்திய அதிகாரிகளுக்கு இஸ்ரேல் பெருமளவு லஞ்சம் கொடுத்தே இந்தத் திட்டங்களுக்கு ஒப்புதல் பெற்று வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனால் சில இஸ்ரேலிய ஆயுதத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இந்தியா தடையும் விதித்துள்ளது.
இந்தப் புகார்கள் ஒருபுறம் இருந்தாலும் இஸ்ரேலின் நவீன ஆயுத தொழில்நுட்பங்கள் இந்தியாவுக்குக் கிடைத்து வருவதை யாராலும் மறுக்க முடியாது என்கின்றனர்.
சமீபத்தில் பாகிஸ்தான் எல்லையில் சுரங்கங்கள் அமைக்கப்பட்டதை இந்திய ராணுவம் கண்டுபிடித்தது. இந்தக் குகைகள் வழியாக தீவிரவாதிகளை இந்தியாவுக்குள் அனுப்ப பாகிஸ்தான் திட்டமிட்டிருப்பது உறுதியானது.
இந் நிலையில், தாங்கள் இது போன்ற சுரங்கங்களைக் கண்டுபிடிக்க பாலஸ்தீன எல்லையில் பயன்படுத்தி வரும் நவீன கருவிகளை இந்தியாவுக்கு வழங்க இஸ்ரேல் முன் வந்துள்ளது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...